இன்றும் சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்.. இன்று வாங்கலாமா?

தங்கம் விலையானது தொடர்ச்சியாக கடந்த மாதத்தில் புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே தடுமாறி வருகின்றது.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரே கேள்வி? இன்னும் குறையுமா? இப்போது வாங்கலாமா என்பது தான்.

தங்கத்தினை பொறுத்த வரையில் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே உள்ளூர் நிபுணர்கள் முதல் கொண்டு, சர்வதேச நிபுணர்கள் வரை கூறி வருகின்றனர். சிலர் ஒரு படி மேலே போய் தங்கம் விலை எப்படி இருந்தால் என்ன? எங்கு வாங்கினாலும் நிச்சயம் லாபம் கொடுக்கும் என்று கடந்த மாதம் வெளியான ஒரு அறிக்கையில் கூறினர். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு தான்.

முக்கிய காரணம் இது தான்?

முக்கிய காரணம் இது தான்?

தொடர்ச்சியாக இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது தடுமாறி வருகின்றதே என்ன காரணம்? முதல் முக்கிய காரணம் அமெரிக்கா டாலரின் மதிப்பு தான். வலுவான அமெரிக்கா டாலரின் மதிப்பு காரணமாக, தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றது. முந்தைய சரிவில் தங்கம் விலையானது 1911.70 டாலர் வரை சென்று இருந்தாலும், தற்போது 1936.60 டாலர் என்ற நிலையிலேயே காணப்படுகிறது.

டாலர் ஒரு மாதத்தில் இல்லாத உச்சம்

டாலர் ஒரு மாதத்தில் இல்லாத உச்சம்

ஆறு நாணயங்களுக்கு எதிரான அமெரிக்கா டாலரின் மதிப்பானது, கிட்டதட்ட ஒரு மாத உச்சத்தினை தொட்டுள்ளது. அதே நேரம் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய கவலைகளால் பவுண்டின் மதிப்பு ஆறு வார குறைந்த அளவினை எட்டியுள்ளது.எப்படி இருப்பினும் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் குறிகாட்டிகளில் டாலரின் மதிப்பும் சற்று பங்கு வகிப்பதால், தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் உள்ளது.

 பலவீனமான நுகர்வு

பலவீனமான நுகர்வு

எனினும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் காரணமாக நுகர்வு என்பது பலவீனமாகவே உள்ளது. அதோடு பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகளிலும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகின்றது. இதனுடன் அமெரிக்கா சீன பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆக இதெல்லாம் நீண்டகால நோக்கில் தங்கம் விலையை ஆதரிக்கும் காரணிகளாக உள்ளன.

 பத்திர விளைச்சல்

பத்திர விளைச்சல்

உலகளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலை, அதாவது அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள், சீனாவுடனான அமெரிக்காவின் பொருளாதார உறவினை கட்டுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதையடுத்து, இவ்விரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமும் உயர்ந்து வருகின்றது. இவைகள் தங்கத்தின் விலையினை ஆதரிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதோடு பத்திர விளைச்சலை குறைவாக வைத்திருக்கிறது என்றும் மின்ட் தரவுகள் கூறுகின்றன.

தங்கத்தினை வாங்கலாம்

தங்கத்தினை வாங்கலாம்

தங்கம் விலையானது குறைந்த விலையில் இருக்கும் போது வாங்கி வைக்கலாம் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. ஏனெனில் கொரோனாவினால் நெருக்கடியில் உள்ள பொருளாதாரத்தினால், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்ற எண்ணமும் நிலவி வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாகவே நிபுணர்களின் தரவும் வந்து கொண்டுள்ளன.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வரும் நிலையில், வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய மத்திய வங்கிக் கூட்டத்தினை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். ஏனெனில் இந்த கூட்டத்தில் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதாக முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலையில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த சில தினங்களாகவே சற்று சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் சரிவில் உள்ளது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 8.10 டாலர்கள் குறைந்து, 1935.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது 0.44% வீழ்ச்சியாகும். நேற்றைய சந்தையில் காலையில் பலத்த சரிவில் இருந்திருந்தாலும், முடிவில் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் இன்றும் சற்று சரிவிலேயே தொடங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கத்தின் விலையினை போலவே சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் இன்று சரிவில் தான் காணப்படுகிறது. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வரும் வெள்ளியின் விலையானது, தற்போதும் 0.93% வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.256 டாலர்கள் குறைந்து 26.727 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை 253 ரூபாய் குறைந்து, 51,100 ரூபாயாக காணப்படுகிறது. இது 0.49% சரிவாகும். கடந்த இரண்டு தினங்களாக சற்று ஏற்றம் கண்டிருந்த நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக கிலோவுக்கு 859 ரூபாய் குறைந்து, 67,635 ரூபாயாக காணப்படுகிறது. இது 1.26% சரிவாகும். வெள்ளியின் விலையும் கடந்த மூன்று தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று சற்று சரிவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இன்று எப்படி இருக்கும்? வாங்கி வைக்கலாமா?

இன்று எப்படி இருக்கும்? வாங்கி வைக்கலாமா?

தங்கம் விலையானது டாலரின் மதிப்பு சற்று வலுவாக உள்ள நிலையில், நேற்றைய குறைந்தபட்ச விலையான 1911.70 டாலரினை உடைத்து கீழே சென்றால் சற்று குறையும் விதமாக உள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்றைய பிவட் பாயிண்ட் 51,129 ரூபாயாகும், அடுத்தடுத்த சப்போர்ட் லெவல்கள் 51,035, 50950, 50820 ஆகும். இதே ரெசிஸ்டன்ஸ் டெலவல்கள் 51,671, 51,757,51887 ரூபாயாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+