கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது மக்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விதமாக சற்று விலை குறைந்திருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை என்றே கூறலாம்.
ஏனெனில் தங்கம் விலை தற்போது மீண்டும் உயர ஆரம்பித்து விட்டது. ஏன் எதற்காக தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. வழக்கம் போல இந்த கொரோனாவின் பயம் தானா? ம்ம்.. அப்படியும் இருக்கலாம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவினால் அமெரிக்கா பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கூறியதை தொடர்ந்து, தற்போது பொருளாதார மீட்பு நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதையும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
டிரம்பின் நடவடிக்கை என்ன?
இந்த நிலையில் தற்போதைய பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் இருந்து முதலீட்டாளர்கள் கூடுதலாக பல திட்டங்களை எதிர்பார்த்தனர். மேலும் பலமாக வீழ்ச்சி கண்டு எண்ணெய் விலை மற்றும் தொடர்ச்சியான வைரஸ் அச்சங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்ய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் என்றும் இதற்கான டிரம்ப் கூட்டத்தை அறிவித்த பின்னர், பங்கு சந்தைகள் சற்றும் அப்போது ஏற்றம் காண ஆரம்பித்தன.
பங்கு சந்தைகள் வீழ்ச்சி
ஆனாலும் டிரம்ப்பிடம் இருந்து ஏதேனும் முக்கிய நடவடிக்கைகள் இருக்கலாம். எதிபார்க்கப்பட்ட நிலையில் அக்கூட்டம் ஏதோ ஒரு காரணத்தினால் நடைபெறவில்லை. ஆனால் முதலீட்டாளர்கள் டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்கு தேவையான உறுதிகள் கிடைக்கவில்லை, அது தாமதமாகி வருவது போல் தெரிகிறது. ஆக அங்கு முதலீட்டாளர்களில் பார்வையில் இன்னும் கூட பல பிரச்சனைகள் உள்ளதாகவும், இதனால் பங்கு சந்தைகள் வீழ்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது தான் பாதுகாப்பு புகலிடம்
இதற்கு மத்தியில் பாதுக்காப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இது தங்கம் விலையை அதிகரிக்க காரணமாக அமையலாம். இன்னும் சில முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கம் கவர்ச்சிகரமான முதலீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் தங்கம் பாதுக்காப்பானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் சராசரி விலை அவுன்ஸூக்கு 1725 டாலர்களாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
வட்டி குறைப்பு இருக்குமா?
அதே நேரத்தில் நலிவடைந்து வரும் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியை தடுக்க, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி இந்த முறை நிச்சயம் வட்டி குறைப்பு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது பொருளாதாரத்தினை மேம்படுத்த வழிவகுக்கக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அப்படியே ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பதைப் போல் வட்டி குறைப்பு செய்தாலும், அது உடனடியாக தாக்கத்தினை ஏற்படுத்துமா, பொருளாதாரத்தினை மேம்படுத்துமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதெல்லாம் சரி இன்று தங்கம் விலை எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் விலை
கடந்த மூன்று சந்தை தினங்களாகவே சற்று வீழ்ச்சி கண்டு வந்த தங்கம் விலையானது, தற்போது 1,663.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் நேற்றைய முடிவு விலையிலிருந்து அவுன்ஸூக்கு 3.80 டாலர்கள் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது போல் டிரம்பின் அறிவிப்பினையடுத்து தங்கம் விலை மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கத்தின் விலையானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 82 ரூபாய் அதிகரித்து 43,822 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் மூன்று நாள் சரிவுக்கு பிறகு இன்று சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை
வழக்கம் போல சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண (22 கேரட்) தங்கத்தின் விலையானது ஒரு ரூபாய் அதிகரித்து 4,217 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 33,736 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையிலும் சரி, இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்திருந்தாலும், இந்தியாவில் அதிலும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் அது எதிரொலிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்துள்ளது.
வெள்ளி
இதே வெள்ளி விலையானது எம்சிஎக்ஸ் சந்தையில் 264 ரூபாய் அதிகரித்து 46,386 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 48.50 ரூபாயாகவும், இதே கிலோ 48,500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதே சர்வதேச சந்தையில் 0.44% அதிகரித்து 17.027 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
ஆய்வாளர்கள் மதிப்பிடுவது போல் தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமா? ஏதேனும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இருக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications