தங்கம் விலையில் தடுமாற்றம்.. திருமணத்திற்கு தங்கம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு பணம் மிச்சம் ஆகும்?

இந்தியத் திருமணங்களில் அதிக செலவு பிடிக்கும் விஷயம் என்றால் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் தங்க நகைகள் வாங்குவதுதான். கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வந்தது. இதனால் பல குடும்பங்கள் தங்கம் வாங்குவதைத் தள்ளிப் போட்டு வந்தன. ஆனால் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கடுமையாக குறைந்தது வந்தது. இன்றைய தினம் கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. இருந்தாலும் இதற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட விலையோடு ஒப்பிடுகையில் இதுவும் நகை வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தான்.

தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது?: தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது 10 கிராம் ரூ.1.75 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை விற்பனையாகிக் கொண்டிருந்தது. அதாவது ஒரு பவுன் ரூ.1,44,000 வரை சென்றது. கிராம் ரூ.18,000 வரை விற்பனையானது. ஆனால் இன்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் 11,540-க்கும், 24 கேரட் தங்கம் ரூ.12,589-க்கும், ஒரு பவுன் 22 கேரட் தங்கம் ரூ.92,320-க்கும், ஒரு பவுன் 24 கேரட் தங்கம் ரூ.1,00,712-க்கும் விற்பனையாகிறது. மணப்பெண்ணுக்கு தேவைப்படும் வளையல், தோடு, மாட்டில், நெக்லஸ் போன்ற நகைகளை வாங்க திட்டமிடுபவர்களுக்கு தற்போதைய விலை சரிவு பணத்தை மிச்சப்படுத்த உதவும்.

தங்கம் விலையில் தடுமாற்றம்.. திருமணத்திற்கு தங்கம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு பணம் மிச்சம் ஆகும்?

திருமணத்திற்காக தங்கம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு பணம் மிச்சம் ஆகும்?: ஒரு குடும்பம் திருமணத்திற்காக 50 கிராம் வரையிலான தங்கத்தை வாங்க திட்டமிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதற்கு முன்னர் 1 பவுன் ரூ.1.44 லட்சம் என்ற விலையில் விற்பனையானது. இந்த விலைக்கு 50 கிராம் தங்கத்தின் மதிப்பைக் கணக்கிட்டால் ரூ.9 லட்சம் வரும்.

Also Read

ஆனால் தற்போது 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ. 92,320 லட்சமாகக் குறைந்துள்ளது. இந்த விலையை வைத்து கணக்கிட்டால் அதே 50 கிராம் தங்கத்தை ரூ.5,77,000 லட்சத்தில் வாங்கிவிடலாம். இதன் மூலம் ரூ. 3.23 லட்சம் வரை பணத்தை சேமிக்க முடியும். இந்த தொகையை திருமணத்தின் மற்ற செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது வெறும் தங்கத்திற்கான கணக்கீடு மட்டுமே. நகைகளாக வாங்கினால் அதற்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி போன்றவற்றை சேர்த்து தான் வாங்க முடியும். இதோடு கடைக்காரரின் லாபமும் அடங்கும்.

இந்தியாவை பொறுத்தளவில் திருமணம் என்றாலே அதில் பெரும் பங்கு தங்கநகை வாங்க சென்று விடும். பொதுவாக திருமண ஏற்பாடுகள் நடைபெறும் பல மாதங்களுக்கு முன்னரிலிருந்து சிறுக சிறுக தங்கத்தை சேமிக்க தொடங்கி விடுவார்கள். ஆனால் விலை உயர்வால் தங்கம் வாங்குவதை தள்ளிப் போட்டு வந்த இந்திய மக்களுக்கு தற்போதைய விலை குறைவு ஒரு பொன்னான வாய்ப்பாக மாறியுள்ளது .தங்கம் தான் குறைந்திருக்கிறது என்று பார்த்தால் வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்திருக்கிறது. 1 கிலோ வெள்ளி ரூ.4 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ரூ.1.65 லட்சமாக குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்னும் குறையுமா?: தங்கம் விலை தற்போது குறைந்திருக்கிறதே இது மென்மேலும் குறையுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதை யாராலும் கணித்து கூற முடியாது. சர்வதேச சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது? அமெரிக்க டாலரின் மதிப்பு என்ன? மற்றும் உலகப் பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றையெல்லாம் பொறுத்தே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே திருமண தேதி நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் விலை குறையும் என காத்திருக்காமல் அதே நேரத்தில் மொத்த நகையையும் ஒரே நேரத்தில் வாங்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதிலாக முக்கியமான நகைகளை இப்போது வாங்கிவிட்டு விலை குறைந்தால் பின்னர் சிறுக சிறுக வாங்கிக் கொள்ளலாம். அட்வான்ஸ் புக்கிங் போன்றவற்றை செய்து வைப்பதும் நல்லது. இதனால் முன்பதிவு செய்யும் நாளில் தங்கத்தின் விலை எவ்வளவு அதே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+