கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் கணிசமான சரிவினைக் கண்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ஆறு வருடத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு அருகில் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 5% அதிகமாக சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த ஒரு மாதமாக பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
விலையுயர்ந்த உலோகங்கள் விலை வீழ்ச்சி
இதேபோல உச்சத்தில் இருந்து வெள்ளி விலை, பிளாட்டினம் விலை, பல்லோடியம் விலைகளும் வருடங்களில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது, கடந்த ஒரு மாதமாக பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
எனினும் பரவி வரும் ஓமிக்ரான், பணவீக்கம் குறித்த கவலைகள் சந்தையில் நிலவி வருகின்றது. மேலும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி பத்திரம் வாங்குதல் நடவடிக்கை கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகளாக உள்ளன.
இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது 1780 - 1920 டாலர்களுக்கு இடையே வர்த்தகமாகி வருகின்றது. இது வருட இறுதி, விடுமுறை நாட்கள் என பல காரணிகளுக்கும் மத்தியில் பெரிய மாற்றமின்றி காணப்படுகின்றது.
ரூ.9000 சரிவு
வரும் வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு, பத்திர சந்தை, ஓமிக்ரான் பரவல், சீனா குறித்த கவலைகள், வட்டி விகித மாற்றம் உள்ளிட்ட பலவும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
கடந்த ஆண்டில் தங்கம் விலையானது எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.
தங்கம் விலை குறையலாம்
மீடியம் டெர்மில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டாலும், வளர்ந்து வரும் பொருளாதாரம், வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை, ஓமிக்ரானால் ஆதரிக்கப்படலாம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications