தங்கம் விலையானது இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
குறிப்பாக தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவாக காணப்படும் நிலையில், தங்கம் விலையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
இது இந்திய சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தினை குறைத்துள்ளது.
ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலை
கடந்த சில வாரங்களாக ரேஞ்ச் பவுண்ட்டிலேயே வர்த்தகமாகி வரும் தங்கம் விலையானது, தற்போது வரையில் அப்படியே தான் வர்த்தகமாகி வருகின்றது. இது டாலரின் மதிப்பானது வலுவாக காணப்பட்டாலும், சர்வதேச அளவில் ரெசசன் குறித்தான அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றமும் காணாமல், சரிவினையும் காணாமல் காணப்படுகின்றது.
முதலீட்டாளர்கள் அச்சம்
இன்று அமெரிக்க சந்தைகள் விடுமுறை என்பதால், தங்கம் விலையில் பெரியாளவில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்திலேயே 1% சரிவினைக் கண்ட தங்கம் விலையானது, இந்த வாரத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம்
அமெரிக்கா, இந்திய மத்திய வங்கிகளை தொடர்ந்து, ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவரம் என்ன?
சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது, 0.34% அதிகரித்து, 1846.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே போல வெள்ளி விலையும் 0.52% அதிகரித்து, 21.700 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4785 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 38,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 5219 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 41,752 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 52,190 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு 66.30 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இது பணவீக்கம், டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, ரெசசன் அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications