சாமனியர்களுக்கு ஜாக்பாட்.. இது தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய குடும்பங்களில் சுமார் 25,000 டன் இருப்பதாக உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரம் கூறுகின்றது. உண்மையில் இந்தியர்களின் வாழ்க்கையில் அவர்களின் உணர்வுகளாய், பாரம்பரியமாய், அந்தஸ்த்தின் அடையாள சின்னமாய் தங்கம் விளங்குகிறது.

உலக நாடுகளிலேயே சீனாவுக்கு அதிகப்படியாக தங்கத்தினை அதிகம் பயன்படுத்துவது இந்தியா தான்.

இப்படி மக்களின் வாழ்வில் கலந்துள்ள தங்கத்தின் இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது. இதனால் இறக்குமதிகள் இனி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம்

தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம்

தங்கம் இன்றைய காலகட்டத்திலும் மக்களின் விருப்பமான முதலீடாக மட்டும் அல்லாமல், விருப்பமான விலையுயர்ந்த ஆபரணமாகவும் இருந்து வருகின்றது. இந்திய மக்களின் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் கலந்துள்ள தங்கம், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் கொரோனாவால் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட விழாக்கள், இந்த ஆண்டு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

அதோடு இந்த வாரத்தில் தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்துள்ளது. அதுவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும் போது இன்னும் பலத்த சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு வார கேண்டில் ஸ்டிக் பேட்டர்னில் புல்லிங் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், வரும் வாரத்தில் சற்று ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம். இதனால் குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

என்ன பார்க்கபோகிறோம்?

என்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடியிருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம்.

COMEX தங்கம் விலை பலத்த சரிவு

COMEX தங்கம் விலை பலத்த சரிவு

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் முதல் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக சரிவினைக் கண்டிருந்தாலும், கடைசி நாள் தங்கம் விலையானது சற்று ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1820.90 டாலர்களாக தொடங்கி நிலையில், அன்று அதிகபட்சமாக 1827 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 1759 டாலர்கள் வரையில் குறைந்தது. எனினும் 1783 டாலர்களாக முடிவடைந்தது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

எனினும் வார கேண்டில் பேட்டர்னில் பையிங் பேட்டர்ன் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், வரும் வாரத்தில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இந்த நேரத்திலேயே வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் திங்கட்கிழமையன்று எப்படி சந்தை தொடங்குகிறது என்பதை பொறுத்தே அடுத்த வாரம் இருக்கும்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் முதல் நாள் ஏற்றத்தினை கண்டிருந்தாலும், அதன் பிறகு மூன்று நாட்கள் சரிவில் இருந்தது. எனினும் கடைசி நாள் மீண்டும் ஏற்றம் கண்டு முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 27.503 டாலர்கள் தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமையன்று 28.075 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 26.105 டாலர்கள் வரையில் குறைந்து, பின்னர் முடிவில் 27.372 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை, கடந்த வாரத்தில் முதல் நான்கு நாட்கள் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், கடைசி நாள் ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,436 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்று அதிகபட்சமாக 47,455 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 45,861 ரூபாய் வரை குறைந்து, 46,197 ரூபாயாக முடிவுற்றது. அதோடு கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,300 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் முதல் வர்த்தக அமர்வும், கடைசி வர்த்தக அமர்வும் ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் இடையில் உள்ள மூன்று அமர்வுகளும் சரிவில் காணப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 69,300 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக அன்று 70,244 ரூபாய் வரையில் சென்றது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்த பட்சமாக 67,530 ரூபாய் வரையிலும், அன்று முடிவு விலையானது கிலோவுக்கு 69,012 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரம் தான்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,656 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 35,016 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆக ஒரே வாரத்தில் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு கிட்டதட்ட 8600 ரூபாய் மேல் குறைந்துள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,630 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 47,750 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 880 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 73.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 738 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,800 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 74,600 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 73,800 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது.

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

கடந்த சில வாரங்களாக பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறைந்து வந்தது. அதோடு அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் Vs டாலர்

தங்கம் Vs டாலர்

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது. எனினும் அமெரிக்காவில் இதுவரை கொரோனாவினால் முடங்கியிருந்த, தொழில்கள், தற்போது பணியின் காரணமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டாலும், அது பொருளாதாரத்தினை மீண்டு வர தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தங்கத்தினை வாங்க சரியான இடமா?

இது தங்கத்தினை வாங்க சரியான இடமா?

தங்கம் விலையானது இந்திய சந்தையில் தற்போது 46,000 ரூபாய் என்ற விலையில் உள்ளது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆகவே நீண்டகால நோக்கில் தங்கத்தினை 45,600 - 45800 ரூபாய் என்ற நிலையில் வாங்கலாம். எனினும் வலுவான ஸ்டாப் லாஸ் ஆக 44,500 ரூபாய் என்ற விலையினை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

பெரியளவில் ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

பெரியளவில் ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

அதோடு அமெரிக்காவில் ஊக்கத்தொகைகள் குறித்த அறிவிப்புகள் மீண்டும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகப்பெரிய ஊக்கத்தொகை வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதோடு பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால் மீண்டு தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகளுடனே இருக்கலாம். எனினும் திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து இதனை தீர்மானிக்கலாம். ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices heavy fall in record high: it's best time to buy

Gold price update.. Gold prices last week edges higher, but Rs.10,300 above down from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X