வரலாறு காணாத புதிய உச்சம்.. தொடர்ந்து அதிரடி காட்டும் தங்கம் விலை.. பட்டையை கிளப்பும் வெள்ளி விலை!

டெல்லி: கொரோனாவை விட மிக வேகமாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலையினால், இனி சமானியர்கள் தங்கத்தினை கனவில் தான் நினைக்க வேண்டும் போல.

இந்தியாவின் பாரம்பரிய ஆபரணமாக அணியப்படும் உலோகம் தங்கம் என்பதால், இந்த தொடர் விலையேற்றமானது பெரும் அதிர்ச்சியினை உருவாக்கியுள்ளது.

ஏனெனில் கல்யாண வீடு முதல் சாவு வீடு வரை அனைத்திலும் சிறந்த சீதனமாக கருதப்படுவது தங்கம் தான். பிறந்த குழந்தைக்கு முதல் கொண்டு அணிவிக்கும் ஆபரணம் முதற்கொண்டு தங்கமாகத்தான் உள்ளது.

புதிய உச்சம் தொட்டு வரும் தங்கம்

புதிய உச்சம் தொட்டு வரும் தங்கம்

அந்தளவுக்கு நம் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாக உள்ளது. இப்படி இருக்கையில் ஒட்டு மொத்த மக்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப்போடும் விதமாக தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களாக தங்கம் விலையானது புதிய உச்சம் தொட்டு வருகிறது.

இன்றைய விலை நிலவரம்

இன்றைய விலை நிலவரம்

இதற்கிடையில் இன்று காலை நேர வர்த்தகத்திலேயே தங்கம் விலையானது பட்டை கிளப்பிக் கொண்டு வர்த்தகமாகி வருகிறது. அது சர்வதேச சந்தையானலும் சரி, இந்திய கமாடிட்டி வர்த்தகமானலும் சரி. அமெரிக்கா சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றம் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் பதற்றம்

அதிகரித்து வரும் பதற்றம்

மேலும் இவ்விரு நாடுகளிடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிலையே இருந்து வருகிறது. ஆக இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனா தனது போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த வாரம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து சீனா அமெரிக்கா இடையேயான கருத்து மோதல்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 10 கிராம் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை 51,833 ரூபாயினை தொட்டுள்ளது. இதுவே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 64,849 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

டாலரின் மதிப்பு வீழ்ச்சி

டாலரின் மதிப்பு வீழ்ச்சி

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்கா டாலரின் மதிப்பு 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் மோதல் போக்கால், பொருளாதாரத்தினை மீட்பதற்காக, மீண்டும் பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏழாவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 30.75 டாலர்கள் அதிகரித்து, 1,928.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 2% ஏற்றமாகும். இன்று அதிகபட்சமாக 1937.60 டாலர்கள் வரையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு, சற்று குறைந்துள்ளது. போகிற போக்கில் நிபுணர்கள் கூறியதைப் போல 2,000 டாலர்களை தொட்டுவிடும் போல் இருக்கிறதே.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது வரையில் மட்டும் வெள்ளியின் விலையானது 6.29% ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலையானது 1.455 டாலர்கள் அதிகரித்து 24.312 ஆக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 852 ரூபாய் அதிகரித்து, 51,887 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக 51,926 ரூபாய் வரையில் வர்த்தகமாகியுள்ளது. இது 1.68% ஏற்றமாகும்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 6% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 3,607 ரூபாய் அதிகரித்து, 64,800 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று அதிகபட்சமாக 64,999 வரையில் வர்த்தகமாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+