தங்கம் விலையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று 2010 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. தொடர்ந்து தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது 1990 டாலர் என்ற கேப்பினை பூர்த்தி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்தில் காணப்படுவது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தற்போது 2010 டாலர்களுக்கு கீழாக காணப்பட்டாலும், அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 2040 டாலராகவும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இதே சரிவானது தொடரும்பட்சத்தில் 1980 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக இன்ட்ரா டேவில் பியரிஷ் பேட்டர்ன் தொடரலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் புல்லிஷ் பேட்டர்ன் தொடரலாம். இன்று அதிகபட்சமாக 1990 டாலர்கள் முதல் 2020 டாலர்களுக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகால நோக்கில் பணவீக்கம், அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய முடிவுகள், அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, டாலர் மதிப்பு, பத்திர சந்தை என பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்கனவே பலமுறை மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், பணவீக்கம் என்பது உச்சத்திலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக நுகர்வோர் விலை குறியீடு, உற்பத்தி குறித்தான தரவு, வேலை குறித்தான தரவு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் தாக்கம் டாலரின் மதிப்பும், பத்திர சந்தையில் இருக்கலாம். இது பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டலாம்.
எல்லாவற்றுக்கு மேலாக ஏற்கனவே பலமுறை மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், பணவீக்கம் என்பது உச்சத்திலேயே காணப்படுகின்றது.
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு, வாரத்தின் முதல் நாளான இன்றே சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 18.95 டாலர்கள் குறைந்து, 2007.45 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல வெள்ளி விலையும் சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 0.64% குறைந்து, 24.927 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 396 ரூபாய் குறைந்து, 60,115 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் மேலும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது இன்னும் குறையும்போது நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.
வெள்ளி விலையானது இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்த வரையில் கிலோவுக்கு, 239 ரூபாய் குறைந்து, 74,330 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் மேலும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில் சென்னையில் இன்று கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து, 5600 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து, 44,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கக்த்தின் விலையானது கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து, 6110 ரூபாயாகவும், கிலோவுக்கு 420 ரூபாய் குறைந்து, 61,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே வெள்ளி விலையானது 20 பைசா குறைந்து, 80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 80,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Disclaimer: Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications