சீனா இந்திய எல்லை பிரச்சனை..தொடர்ந்து உச்சம் கண்டு வரும் தங்கம்..இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ?

கொரோனா ஒரு புறம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றாற்போல தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதே நேரம் இந்தியா சீனா எல்லையில் பதற்றமும் அதிகரித்து வருகிறது. இதுவும் தங்கம் விலை அதிகரிக்க இன்னொரு கூடுதல் காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் நிபுணர்கள் மத்தியில் தங்கம் விலையானது, 46,900 ரூபாய் முதல் 47,700 ரூபாய் வரை வர்த்தகமாகலாம். இதே வெள்ளியின் விலையானது 47,400 ரூபாய் முதல் 48,500 ரூபாய் வரை வர்த்தகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்க காரணம்

தங்கம் விலை அதிகரிக்க காரணம்

தங்கம் விலையினை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இரண்டாவது கட்டமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் இன்னும் என்னவாகுமோ என்ற பதற்றமான உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளார்கள் தங்களது முதலீடுகளை பங்கு சந்தைகளில் குறைத்து வருகின்றனர். இதனால் டாலரின் மதிப்பும் அதிகம் ஏற்றம் காணவில்லை. ஆக இது தங்கம் விலையை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

இந்த நிலையில் முதன் முதலாக கொரோனா தோன்றிய சீனாவில், சமீப வார காலமாக எந்த வைரஸூம் இல்லை என்று கூறி வந்தது. இதற்கிடையில் சமீப நாட்களாக அங்கு கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சீனா செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த ஜூன் 18 அன்று 32 புதிய கொரோனா தொற்றுகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா- சீனா பதற்றம்

அமெரிக்கா- சீனா பதற்றம்

மேலும் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவுடனான உறவுகளை மத்தியிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் காலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. எவ்வாறயினும் அதிகப்படியான ஏற்றம் அமெரிக்க டாலரினால் தடுக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு தற்போது வரையில் 9.15 டாலர்கள் அதிகரித்து, 1,740.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் தங்கம் விலையானது அதிகபட்சமாக 1749.20 டாலர்களாகவும், இதே குறைந்தபட்சமாக 1706.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது இந்திய காமடிட்டி வர்த்தகத்திலும், அதிகளவில் மாற்றம் இல்லாமல் தான், இந்த வாரத்தில் வர்த்தகமாகியுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் 47,399 ரூபாயாக தொடங்கிய 10 கிராம் தங்கத்தின் விலையானது, அதிகபட்சமாக 47,520 ரூபாய் வரையிலும், குறைந்தபட்சமாக 47,328 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது 105 ரூபாய் அதிகரித்து, 47,460 ரூபாயாக (0.23%) வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது தற்போது 1.11% அதிகரித்து வருகிறது. குறிப்பாக 0.195 டாலர்கள் அதிகரித்து, 17,703 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது, இந்த வாரத்தில் அதிகபட்சமாக 17.913 டாலர்களாகவும், குறைந்தபட்சம் 17.017 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியின் விலையானது, 257 ரூபாய் அதிகரித்து 48,123 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.55 சதவீத ஏற்றமாகும். வெள்ளியின் விலையும் இந்த வாரத்தில் அதிகபட்சமாக 48,200 ரூபாய் வரையில் சென்ற நிலையில், குறைந்தபட்சமாக 47,732 ரூபாயாக குறைந்தும் வர்த்தகமாகியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது தற்போது வரையில் இன்னும் மாற்றம் காணாத நிலையில் சவரன் விலையானது 36,416 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே கடந்த வியாழக்கிழமையன்று கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து 4,551 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 36,408 ரூபாயாகவும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெள்ளியின் விலை

சென்னையில் வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையும் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 47.56 ரூபாயாகவும், இதோ கிலோவுக்கு 47,560 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்த நிலையில் இனியும் குறையுமா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+