தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. இன்னும் அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்..!

எது செய்தி ஆகிறதோ இல்லையோ தங்கத்தின் விலை சற்று அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி, அது பெரிய செய்தி ஆகிவிடுகிறது. அப்படித்தான் பலரையும் இப்போது நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கும் ஒரு செய்தி, தொடர்ந்து ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருவது தான், கடந்த செவ்வாய் கிழமையன்று 405 ரூபாயும், இதே இன்று தற்போது வரை 140 ரூபாய் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் நல்ல வேளை நாம் முன்னாடியே வாங்கி வைத்துள்ளோம், அதுவும் குறைந்த விலையில் வாங்கி வைத்துள்ளோம் என்று கூறுபவர்கள் தான் அதிகம்.

ஏனெனில் அந்தளவுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் நம் மக்களிடையே உள்ளது. மேலும் இன்னும் விலை உயர்ந்து விடுமோ?நாம் மிஸ் பண்ணிவிட்டோமோ? என்று அச்சப்படுவோரும் தான் இங்கு அதிகம். ஆனால் இப்படி நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவே ப்யூச்சர் வர்த்தகத்தின் விலை உள்ளது.

ஏற்ற இறக்கத்திலும் லாபம்

ஏற்ற இறக்கத்திலும் லாபம்

ஏனெனில் காலையில் வாங்கி வைத்து விட்டு மாலைக்குள், ஒரு குறிப்பிட்ட லாபத்துக்கு விற்பனை செய்ய இது வழிவகை செய்யப்படுகிறது. அதிலும் சர்வதேச சந்தைகளில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, இந்திய சந்தைகளிலும் வர்த்தகமாகி வருகிறது. அதிலும் ப்யூச்சர் வர்த்தகத்தை பொறுத்த வரை ஏற்ற இறக்கம் இரண்டிலுமே லாபம் காண முடியும் என்பதால், தற்போது பெரும்பான்மையான முதலீட்டாளர்களின் பார்வை இதன் பக்கம் திரும்பியுள்ளது.

தற்போது விலை எப்படி?

தற்போது விலை எப்படி?

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, அதே நேரம் வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய் ஆகியவற்றால் இந்திய வர்த்தகத்தில் ஒரே நாளில் செவ்வாய்கிழமையன்று 10 கிராம் தங்கத்தின் விலையானது 1 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. அதாவது 405 ரூபாய் ஏற்றம் கண்டு 38,662 ரூபாயாக வர்த்தகமாகியும் உள்ளது. இந்த நிலையில் தற்போது 38,770 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

விலை உயர்ந்த உலோகங்கள் பட்டியலில் அடுத்ததாக இருக்கும் வெள்ளி விலையும், கடந்த செவ்வாய்கிழமையன்று 909 ரூபாய் அதிகரித்து, கிலோவுக்கு 46,570 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. இந்த நிலையில் இன்று 47,435 ரூபாயாகவும் வர்த்தகமாகியும் வருகின்றது.

சர்வதேச சந்தையில் எப்படி உள்ளது?

சர்வதேச சந்தையில் எப்படி உள்ளது?

இந்த நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1,500 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 1509.10 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி சீனா அதிபர் ஜின்பிங்கை வர்த்தக போருக்கான அடுத்தகட்ட ஒப்பந்தத்தை மேம்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் இது மேலும் தங்கம் விலை ஏற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.

 இந்திய ரூபாயும் காரணம்

இந்திய ரூபாயும் காரணம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததால், இந்திய சந்தைகளில் தங்கத்தின் விலையை இது ஊக்குவித்தாலும், பலவீனமான ரூபாயும் இதற்கு துணை புரிந்தது என்றும் அபான்ஸ் குழுமத்தின் தலைவர் அபிஷேக் பன்சால் கூறியுள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மூலதன பொருட்களுக்கான புதிய ஆர்டர்கள் நவம்பரில் முடக்கப்பட்டன. மேலும் இதனால் ஏற்றுமதியும் குறைந்தது. இதனால் இது டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தியது. இது தங்கம் விலை ஏற்றத்திற்கு வழி வகுத்தது என்று கூறப்படுகிறது.

வரி அதிகரிப்பு

வரி அதிகரிப்பு

இந்தியாவில் இதுவரை தங்கத்தின் விலையானது 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இறக்குமதி வரி அதிகரிப்பு 12.5 சதவிகிதமாக அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி 3 சதவிகிதம் என விதித்தது தான். இதனால் தங்கத்தின் விலை அதிகரிப்போடு சேர்ந்து இந்த வரி விகிதங்களும் பங்கு வகித்து வருகின்றன. ஆக இதனோடு பலவீனமான ரூபாயும் ஒத்துழைத்து வருகிறது. இதனால் தான் நடப்பு ஆண்டில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தை தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு, இதெல்லாவற்றையும் விட தங்கத்தின் தேவை, வரி அதிகரிப்பு என அனைத்தும் விலை அதிகரிப்பு வழி வகுத்தது. டிசம்பர் 20ம் தேதியிலிருந்து அதிகரித்து வரும் ஆபரண தங்கத்தின் விலையானது, இன்று மட்டும் (22 கேரட்) சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து, 29576 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் சவரனுக்கு 544 ரூபாய் அதிகரித்துள்ளது.

மேலும் வரவிருக்கும் வாரங்களில் தங்கத்தின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் நாட்களில் தேவை அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+