இந்தியாவில் இன்று மிக கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் தந்தேராஸ், ஐந்து நாள் தீபாவளி கொண்டாட்டத்தின் முதல் நாள ஆகும். இது தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.
இந்த நல்ல நாளில் தங்கத்தினை வாங்கினால் அது பெருகும் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. இது லட்சுமி பூஜைக்கு முன்பு வருவதால் இந்த நாளில் தங்கத்தினை வாங்கி வைப்பவர்களும் அதிகம்.
இது மட்டும் அல்ல இந்த தந்தேராஸ்-க்கு பல புராணக் கதைகள் உண்டு. அதே செல்வக் கடவுளான குபேரனையும் இந்த நாளில் மக்கள் வழிபடுகின்றனர். ஆக இந்த நாளில் தங்கத்தினை வாங்குவது மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
3 நாட்களுக்கு பிறகு ஏற்றம்
தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலைக்கு மத்தியில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. எனினும் கடந்த சில மாதங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று வரையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று கீழாகவே காணப்படுகின்றது. இது தீபாவளி, தந்தேராஸ் சமயத்தில் வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து, 4740 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 37,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 81 ரூபாய் அதிகரித்து, 5171 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 648 ரூபாய் அதிகரித்து, 41,368 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 810 ரூபாய் அதிகரித்து, 51,710 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 1.70 ரூபாய் அதிகரித்து, 63.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 632 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1700 ரூபாய் அதிகரித்து, 63,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,400
மும்பை - ரூ.47,000
டெல்லி - ரூ.47,150
பெங்களூர் - ரூ.47,050
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,400


Click it and Unblock the Notifications