ஒரு காலத்தில் சவரன் தங்கம் 4000 - 5000 ரூபாய்க்கு விற்ற தங்கம் விலையானது, இன்று அந்த காசுக்கு ஒரு கிராம் தங்கம் கூட முழுமையாக வாங்க முடியாது போல் இருக்கிறது.
ஏனெனில் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்தால், அது இன்னும் எந்தளவுக்கு இருக்கும் என்றும் தெரியவில்லை. ஏனெனில் நடப்பு ஆண்டில் இது வரையில் 25 சதவீதம் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இப்படி தொடர்ந்து உச்சம் காட்டி வரும் தங்கத்தினால் தங்கம் விலையானது இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ தெரியவில்லை.
சொல்லப்போனால் சாமானியர்கள் இனி தங்கத்தினை பற்றி நினைத்து மட்டும் தான் பார்க்க முடியும் போல. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், தங்கத்தினை நகைகளாக வாங்காமல், பேப்பர் தங்கங்களில் முதலீடுகள் அதிகரித்து வருவது தான்.
தங்கம் விலை
நடப்பு ஆண்டு தொடக்கத்திலேயே 10 கிராம் தங்கம் விலையானது 39,000 ரூபாயினை தொட்ட நிலையில், தற்போது வரலாறு காணாத அளவு 49,500 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. எனினும் தற்போது ப்யூச்சர் சந்தையில் தொடர்ந்து 49,000 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இது வரை தங்கம் விலையானது 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதலீடு செய்ய தூண்டுகிறது
தற்போது உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலையானது ஏற்றம் காண ஆரம்பித்தது. ஆக தற்போது நிலவி வரும் இத்தகைய நிலையானது முதலீட்டாளர்களை தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டுகிறது. நிபுணர்கள் மத்தியில் 10 கிராம் தங்கம் விலையானது 68,000 ரூபாய் வரை செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த காமடிட்டிகளிலும் முதலீடு செய்யலாம்
தற்போது தங்கம் மட்டும் அல்ல, மற்ற காமாடிட்டிகளின் விலையும் அதிகரிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக வெள்ளி, காப்பார் நிக்கல், கடுகு போன்ற கமாடிட்டிக்களுக்கு நல்ல வாய்ப்புகளூம் உள்ளதாக கூறுகின்றனர். செபியால் வரையறுக்கப்பட்ட மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் என்பது மூன்று வகையாக உள்ளன. இதில் பங்கு சந்தை, கடன் சந்தை மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக டாடா காப்பர், நிக்கல், கடுகு போன்ற பிற பொருட்களிலும் முதலீடு செய்கிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை அதிகரிக்கும்
எனினும் இனி வரும் காலத்தில் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொடலாம் என்றும், ஆக இதனை தங்க பத்திரம், தங்க ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம் என்கிறது ஒரு அறிக்கை. டாலரில் அவுன்ஸ் தங்கம் விலையானது 1800 லெவலில் வர்த்தகமாகி வரும் நிலையில், விரைவில் 2,000 டாலரை தொடலாம் என்றும் கூறி வருகின்றனர்.
ஆபரண தங்கம் விலை
ஆக இதன் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இன்னும் எவ்வளவு தான் உச்சம் தொடுமே என்ற எண்ணமே இருந்து வருகிறது. இதற்கிடையில் ஆபரண தங்கம் விலையானை நினைத்து கூட பார்க்க முடியாத விலையினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சமானியர்கள் தங்கத்தினை நினைத்து மட்டுமே பார்த்துக் கொள்ளும் நிலை தான் வரும் போல..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications