தங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் இன்றைய காலகட்டத்திலும் மக்களின் விருப்பமான முதலீடாக மட்டும் அல்லாமல், விருப்பமான விலையுயர்ந்த ஆபரணமாகவும் இருந்து வருகின்றது.

 

இந்திய மக்களின் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் கலந்துள்ள தங்கம், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் கூட, தங்க நகைக்கடை பூட்டப்பட்டிருந்த சமயத்தில், தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால், கடைகளுக்கு சென்று வாங்க முடியாத பட்சத்தில் ஆன்லைனில் வாங்கினர். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

அப்படியானவர்களுக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. அதுவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும் போது பலத்த சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு வார கேண்டில் ஸ்டிக் பேட்டர்னில் புல்லிங் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், வரும் வாரத்தில் சற்று ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம்.

என்னென்ன பார்க்கபோகிறோம்?

என்னென்ன பார்க்கபோகிறோம்?

அதெல்லாம் சரி, கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடிருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம்.

தங்கம் விலை பலத்த சரிவு
 

தங்கம் விலை பலத்த சரிவு

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்தினை கண்டிருந்தாலும், கடைசி இரண்டு நாட்கள் தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 1828.50 டாலர்கள் தொடங்கி நிலையில், அதிகபட்சமாக 1874 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 1836.50 டாலர்கள் வரையில் குறைந்தது. எனினும் 1855.60 டாலர்களாக முடிவடைந்தது. வார கேண்டில் பேட்டர்னில் பையிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், வரும் வாரத்தில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் திங்கட்கிழமையன்று எப்படி சந்தை தொடங்குகிறது என்பதை பொறுத்தே அடுத்த வாரம் இருக்கும்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் கடந்த ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்தினை கண்டிருந்தாலும், கடைசி இரண்டு நாட்கள் தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 24.250 டாலர்கள் தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 26.130 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 25.050 டாலர்கள் வரையில் குறைந்தது. வெள்ளியின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. அதே போல வார கேண்டில் பேட்டர்னிலும் உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்தே வர்த்தகம் இருக்கும்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை, கடந்த வாரத்தில் முதல் மூன்று நாட்கள் பலத்த ஏற்றம் கண்ட நிலையில், கடைசி இரண்டு நாட்கள் வீழ்ச்சி கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 49,355 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியழக்கிழமையன்று 49,765 ரூபாயாக அதிகரித்தது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 48,685 ரூபாய் வரை குறைந்து, 49,140 ரூபாயாக முடிவுற்றுள்ளது. தங்கம் விலையும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 7,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 67,000 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 67,848 ரூபாய் வரையில் சென்றுள்ளது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்த பட்சமாக
65,425 ரூபாய் வரையிலும், அன்று முடிவு விலையானது கிலோவுக்கு 66,642 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 11,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,904 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று 37,240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக ஒரே வாரத்தில் சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 6300 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 50,320 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று அதன் விலை 50,800 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 480 ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 71.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 713 ரூபாயாகவும், கிலோவுக்கு 71,300 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையும் தங்கத்தினை போலவே சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. நடப்பு வார தொடக்கத்தில் 70,000 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 71,300 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் அதிகரித்துள்ளது.

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறைந்து வருகின்றது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி எந்தளவுக்கு கைகொடுக்கும் என்ற பயமும் எழுந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் சந்தையானது ஏற்றத்தாழ்வுகளை கண்டு வருகின்றது.

தங்கம் Vs டாலர்

தங்கம் Vs டாலர்

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, அமெரிக்காவில் விரைவில் அடுத்தகட்ட ஊக்கத்தொகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பினால் சற்று வலுவடைந்து காணப்படுகிறது. இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. ஆக வரவிருக்கும் வாரத்திலும் முதலீட்டாளர்கள் இது குறித்தான முக்கிய அறிவிப்பினை முக்கியமாக கவனிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆக இது தங்கம் விலை இன்னும் சரிய காரணமாக அமையலாம்.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இது மீண்டும் பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மிகப்பெரிய ஊக்கத்தொகையை அறிவிக்க வழிவகுக்கலாம்.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று ஏற்றத்தாழ்வுகளுடனே இருக்கலாம். எனினும் திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து இதனை தீர்மானிக்கலாம். ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices last week edges higher, but nearly Rs.7000 down from record high

Gold price update.. Gold prices last week edges higher, but nearly Rs.7000 down from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X