சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பு.. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் வரலாம்.. நிபுணர்களின் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் அவ்வப்போது சரிந்தாலும், தொடர்ந்து ஏறுமுகத்திலேயே காணப்பட்டது. இது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது.

சொல்லப்போனால் தற்போது முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க தொடங்கியுள்ளனர் எனலாம். எனினும் தங்க ஆர்வலர்கள் பலரும் இந்த நல்ல வாய்ப்பினை மிஸ் செய்துவிட்டோமோ என்ற நிலையில், அப்படியானர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

அதோடு இந்தியாவில் தங்கம் விலை என்னதான் ஏற்றம் கண்டாலும், குறைந்தாலும் சரி, தங்க நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம் என்பது குறைந்தபாடாக இல்லை. மாறாக கொரோனா காலத்தில் கூட ஆன்லைனில் வாங்கிக் குவித்தனர். அந்தளவுக்கு தங்கத்தின் மீது இந்திய மக்களுக்கு அதீத ஆர்வம்.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

தொடர்ந்து சந்தையில் பிசிகல் தங்கத்தின் தேவையானது இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் விலை சற்று குறைந்தாலும், அது அவ்வளவாக ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கவில்லை எனலாம். ஏனெனில் இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தினை வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாமல், அந்தஸ்த்தின் அடையாள சின்னமாய் மக்கள் பார்க்கின்றனர். அப்படியானவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

தங்கத்தின் மீதான அதீத ஆர்வம்

தங்கத்தின் மீதான அதீத ஆர்வம்


பொதுவாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகம். அது ஆபரணமாக இருந்தாலும் சரி, முதலீடாக இருந்தாலும் சரி. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக பட்ஜெட் அறிக்கையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது. இதனால் இறக்குமதிகள் இனி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இரு சந்தைகளிலும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்பட்டாலும், பெரும் தடுமாற்றத்தில் தான் இருந்தது எனலாம். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் மாற்றமில்லாமல் தான் காணப்பட்டது. சந்தையில் முதல் மூன்று நாட்கள் சற்று சரிவினைக் கண்டு இருந்தாலும், அதற்கு வட்டியும் முதலுமாக கடைசி இரண்டு நாட்கள் ஏற்றம் கண்டது. எப்படி பார்த்தாலும் மொத்தத்தில் ஏற்றத்தில் தான் இருந்தது.

கடந்த திங்கட்கிழமையன்று 1726.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1754 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். அன்றே இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1716.60 டாலர்களையும் தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் சற்றே ஏற்றம் கண்டு 1743.90 டாலர்களாக முடிவடைந்தது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கம் விலையானது ஏற்றத்தில் முடிவடைந்து காணப்பட்டாலும், வெள்ளியின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்பட்டது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 25.983 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன் கிழமையன்று குறைந்தபட்சமாக 25.805 டாலர்கள் வரையிலும் சென்றது. இதே அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 26.740 டாலர் வரையில் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 26.338 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையானது நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும். ஆக முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, ஏற்ற இறக்கத்திலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 44,790 ரூபாயாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 45,299 ரூபாயாக அதிகரித்தது. அன்றே குறைந்தபட்சமாக 44,626 ரூபாயினை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும் எனினும் வெள்ளிக்கிழமையன்று 45,021 ரூபாயாக முடிவுற்றது. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் ஏற்றத்தில் முடிந்திருந்தாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 11,100 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், ஒரு நாள் மட்டும் சற்று சற்று சரிவிலும், நான்கு நாட்கள் ஏற்றத்திலும் காணப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 67,226 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சமாக 66,801 ரூபாயினை தொட்டது. எனினும் அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 68,470 ரூபாய் வரையில் சென்றது. இதே வெள்ளிக்கிழமையன்று முடிவு விலையானது கிலோவுக்கு 67,527 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,100 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. எனினும் அதிலும் பெரிய மாற்றம் என்பது இல்லை. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 33,832 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 42250 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 34,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 9,600 ரூபாய் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 46,130 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 46,360 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 71.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 718 ரூபாயாகவும், கிலோவுக்கு 71,800 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 71,700 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 71,800 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்து பார்க்கும்போது வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

பத்திர லாபம் அதிகரிப்பு

பத்திர லாபம் அதிகரிப்பு

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், அதிகரித்து வரும், அமெரிக்க பத்திர சந்தையும்., இதனால் அதிகரிக்கும் டாலரின் மதிப்பும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம், அதாவது தங்கம் விலையில் சற்று அழுத்ததினை கொடுக்கலாம் என சர்வதே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமான கிரெடிட் சூசி கூறியுள்ளது.

வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரம்

வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரம்

சர்வதேச அளவில் பொருளாதாரம் வளர்ச்சி பாதையினை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க பத்திர சந்தையும், டாலரின் மதிப்பும் தங்கத்திற்கு எதிராக உள்ளது. தற்போது பொருளாதாரமும் சாதகமான வளார்ச்சியினை கண்டு வரும் நிலையில், அது நிச்சயம் தங்கத்திற்கு எதிராகத் தான் அமையும். இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசிகளும் வந்து கொண்டுள்ளது. ஆக மொத்தத்தில் தங்கத்திற்கு ஆதரவாக ஒரு சில காரணிகள் இருந்தாலும், பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ளன.

ஊக்கம் கொடுக்கும் ஊக்கத்தொகை அறிவிப்புகள்

ஊக்கம் கொடுக்கும் ஊக்கத்தொகை அறிவிப்புகள்

பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டில் மத்திய வங்கியும் பொருளாதாரத்தினை மேம்படுத்த, பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக பல்வேறு பெரியளவிலான ஊக்கத்தொகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அரசு 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. இது உலகின் முதல் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும். இது பங்கு சந்தைகளுக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலரின் மதிப்புக்கும் சாதகமாக அமைந்துள்ளது.

வெளியேறும் முதலீடுகள்

வெளியேறும் முதலீடுகள்

சர்வதேச அளவில் ஏற்றம் கண்டு வரும் பங்கு சந்தைகள், பத்திர சந்தைகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. அதோடு தற்போது பிட்காயின் முதலீடு என்பதும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளது. தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடுகளும் வெளியேறி வருகின்றது. குறிப்பாக தங்க இடிஎஃப்களில் செய்யப்பட்ட முதலீடுகள் கணிசமான அளவு வெளியேற்றம் கண்டு வருகின்றன.

புதிய தடைகள்

புதிய தடைகள்

இந்தியாவில் மேற்கொண்டு பரவி வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, புதிய தடைகள், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நகை விற்பனையாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், கடைகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக நகை கொள்முதல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

எனினும் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும் சந்தையின் போக்கினை தீர்மானிக்கலாம். பல காரணிகளும் தங்கத்திற்கு பாதகமாக உள்ள நிலையில் நாளை தொடக்கத்தினை பொறுத்தி தீர்மானிக்கலாம். சில நிபுணர்களும் வரும் வாரத்தில் தங்கம் விலையானது செல்லிங் பிரசரில் இருக்கலாம் கூறுகின்றனர். இதனால் வரும் வாரத்திலும் எப்படி இருக்கும் என்று கணிப்பது கடினம். ஆக தொடக்கத்தினை பொறுத்தே தீர்மானிக்க முடியும். எப்படி இருப்பினும் நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து தீர்மானிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices last week edges higher, may dip further in coming days

Gold weekly updates.. Gold prices last week edges higher, may dip further in coming days
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X