நடுத்தர மக்களுக்கு இது நல்ல வாய்ப்பு.. பலத்த சரிவில் தங்கம் விலை.. இனியும் குறையுமா?

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் மூன்று நாடகள் ஏற்றத்திலும், இரு நாட்கள் மட்டும் சரிவிலும் காணப்பட்டது. அதிலும் பெரியளவிலான ஏற்றத்தினையே பதிவு செய்துள்ளது. இது நடுத்தர மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஏனெனில் தொடர்ந்து சந்தையில் பிசிகல் தங்கத்தின் தேவையானது இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் விலை சற்று குறைந்தாலும், அது அவ்வளவாக ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கவில்லை.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

குறிப்பாக கடந்த வாரத்தில் 7 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே சற்று குறைந்துள்ளது, மற்ற ஐந்து நாட்கள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. இது இந்திய மக்கள் தங்கத்தின் மீது எந்தளவுக்கு ஆர்வமாக உள்ளனர் என்பதனையே சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் இந்தியாவினை பொறுத்தவரையில் வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாமல், அஸ்தஸ்த்தின் அடையாள சின்னமாய் தங்கம் விளங்குகிறது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

இதனை இன்னும் தெளிபடக் கூற வேண்டுமானால், உலக நாடுகளிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக, தங்கத்தினை அதிகம் பயன்படுத்துவது இந்தியா தான். இந்த நிலையில் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியான பட்ஜெட் அறிக்கையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது. இதனால் இறக்குமதிகள் இனி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? வெள்ளியின் விலை நிலவரம் என்ன? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் முதல் நாள் சற்று சரிவினைக் கண்டு இருந்தாலும், அதற்கு வட்டியும் முதலுமாக மூன்று நாட்கள் தொடர் சரிவினைக் கண்டது. கடைசி நாளும் கூட சரிவினைக் கண்டாலும், முடிவில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. திங்கட்கிழமையன்று 1701.60 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே 1683 டாலர்கள் வரை சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையும் கூட. இதற்கிடையில் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1738 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்சம். வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 1725.60 டாலர்களை தொட்டது.

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலையாக கருதப்பட்ட 1750 டாலர்களை இன்னும் உடைத்து காட்டவில்லை. இன்னும் அதற்கு கீழாகத்தான் முடிவடைந்துள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தினை பொறுத்தே வர்த்தகத்தினை செய்வது நல்லது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

எனினும் வார கேண்டில், மாத கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் செல்லிங் பிரசரிலேயே காணப்படுகிறது. இதனால் வரும் வாரத்திலும் எப்படி இருக்கும் என்பது கடினம். அதன் தொடக்கத்தினை பொறுத்தே தீர்மானிக்க முடியும். எப்படி இருப்பினும் நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்காள் நாளை தொடக்கத்தினை பொறுத்து தீர்மானிக்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்பட்டது,. இரண்டு நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 25.400 டாலர்கள் தொடங்கிய நிலையில், அன்றே 24.970 டாலர்கள் வரை சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகவும் இருந்தது. இதே அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 26.010 டாலராக முடிவுற்றது. வெள்ளியின் விலையானது நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும். ஆக முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, மூன்று நாட்கள் ஏற்றத்திலும், இரண்டு நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 44,756 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே 44,150 ரூபாயினை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 45,167 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 44,750 ரூபாயாக முடிவுற்றது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 11,450 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், முதல் நாள் சற்று சற்று சரிவிலும், அடுத்த இரு நாட்கள் ஏற்றத்தினை கண்டும், கடைசி இரு நாட்கள் மீண்டும் சரிவிலும் காணப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 66,455 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 65,247 ரூபாயினை தொட்டத்து. அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 68,099 ரூபாய் வரையில் சென்றது. இதே வெள்ளிக்கிழமையன்று முடிவு விலையானது கிலோவுக்கு 66,844 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 5 நாட்கள் ஏற்றத்திலும், இரு நாட்கள் மட்டும் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 33,768 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4231 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 33,848 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு கிட்டதட்ட 9800 ரூபாய் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இரு மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 46,050 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 46,160 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 71.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 714 ரூபாயாகவும், கிலோவுக்கு 71,400 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 71,000 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 71,400 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது.ளது.

பத்திர லாபம் அதிகரிப்பு

பத்திர லாபம் அதிகரிப்பு

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்குமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி அதிகரிக்கும்

இறக்குமதி அதிகரிக்கும்

தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் தேவையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இது விலை சரிவு தடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும் போது தங்கம் விலையானது பலத்த சரிவில் காணப்படுகிறது. ஆக இது பலரையும் வாங்க தூண்டலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+