செம சரிவில் தங்கம் விலை.. இது சூப்பர் சான்ஸ்.. இப்போது வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆண்டில் தங்கத்தின் விலையானது கொரோனா பரவலை விட வேகமாக அதிகரித்தது. ஆனால் இது நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே சரிந்து வருகிறது.

 

அதுவும் உச்சத்தில் இருந்து 20% மேலாக குறைந்து காணப்படுகிறது. ஆக சாமனியர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இது இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 12,000 சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால முதலீட்டாளர்களுக்கும் இது வாங்கி வைக்க நல்ல இடமாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் மீதான ஆர்வம்

தங்கத்தின் மீதான ஆர்வம்

ஏனெனில் தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில் என்னதான் விலை குறைந்தாலும், விலை அதிகரித்தாலும் தங்க நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தால், அவைகள் சாட்சி சொல்லும். தங்கத்தின் மீது மக்கள் எவ்வளவு பிரியம் வைத்துள்ளனர் என்று. அந்தளவுக்கு இந்திய மக்கள் தங்கத்தின் மீது ஆர்வமாக உள்ளனர். இது வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாமல், இந்தியர்களின் வாழ்க்கையில் அஸ்தஸ்த்தின் அடையாள சின்னமாய் தங்கம் விளங்குகிறது. அதோடு தற்போது முதலீட்டிலும் தங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. ஆக குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

உலக நாடுகளிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக, தங்கத்தினை அதிகம் பயன்படுத்துவது இந்தியா தான். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியான பட்ஜெட் அறிக்கையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது. இதனால் இறக்குமதிகள் இனி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இதனை இன்னும் மெருகேற்றும் விதமாக, தங்கம் விலையும் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினை கண்டுள்ளது. ஆக இவையெல்லாம் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன பார்க்கபோகிறோம்?
 

என்னென்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்த சந்தைகளில் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கம் மற்றும் வெள்ளிக்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

கடந்த வாரத்தில் காமெக்ஸ் தங்கம் விலை?

கடந்த வாரத்தில் காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் ஐந்து வர்த்தக நாளில் 1 நாள் மட்டும் ஏற்றம் கண்டு, மற்ற நாட்கள் சரிவிலேயே காணப்பட்டன. திங்கட்கிழமையன்று 1732.80 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 1757.40 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்சம். வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 1683 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலை. எனினும் முடிவில் 1698 டாலர்களாக முடிவடைந்தது.

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் அனைத்து முக்கிய சப்போர்ட் விலைகளை உடைத்து காட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முடிவிலும் 1700 கீழாகவே முடிந்துள்ளது. வார கேண்டில் பேட்டர்னிலும் சற்று சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது சற்று சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தினை பொறுத்தே வாங்கலாமா? என்பதை தீர்மானிக்கலாம். நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தற்போது வாங்கலாம்.

கேண்டில் பேட்டர்ன் என்ன சொல்கின்றது?

கேண்டில் பேட்டர்ன் என்ன சொல்கின்றது?

கேண்டில் பேட்டர்ன்களை பொறுத்தவரையில், மாத கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன், வார கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் செல்லிங் பிரசரிலேயே காணப்படுகிறது. இதனால் வரும் வாரத்திலும் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம் தான். ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைத்தாலும். மீடியம் டெர்மில் கொஞ்சம் பொறுத்திருப்பது வாங்குவது நல்லது.

கடந்த வாரத்தில் காமெக்ஸ் வெள்ளி விலை

கடந்த வாரத்தில் காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது கடந்த ஒரு வாரத்தில், முதல் இரண்டு நாட்கள் சற்று தடுமாற்றத்திகும் கடைசி மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 26.700 டாலர்கள் தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக அன்றே 27.175 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 24.845 டாலர்கள் வரையில் குறைந்து, பின்னர் முடிவில் 25.280 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையும், நாளை தொடக்கத்தினை பொறுத்தே இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் தங்கம் விலை

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் சரிவிலும், 2 நாட்கள் ஏற்றத்திலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,000 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 46,139 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 44,217 ரூபாய் வரை குறைந்து, 44,683 ரூபாயாக முடிவுற்றது. ஒரு வாரத்தில் மட்டும் கிட்டதட்ட 2000 ரூபாய் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 11,500 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், முதல் நாள் சற்று ஏற்றத்தினை கண்டு இருந்தாலும், அதற்கு அடுத்த நான்கு நாட்களும் தொடர்ச்சியாக பலத்த சரிவினைக் கண்டுள்ளது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 69,854 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 69,872 ரூபாய் வரையில் சென்றது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்த பட்சமாக 64,875 ரூபாய் வரையிலும், அன்று முடிவு விலையானது கிலோவுக்கு 65,603 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. ஒரு வாரத்தில் வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 5000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 7,800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 5 நாட்கள் சரிவில் இருந்தது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 34,840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,217 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 33,736 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆக ஒரே வாரத்தில் சவரனுக்கு 1104 ரூபாய் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு கிட்டதட்ட 8,760 ரூபாய் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 47,510 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 46,000 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 1510 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 70.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 701 ரூபாயாகவும், கிலோவுக்கு 70,100 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 73,300 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 70,100 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 3200 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் முக்கிய சப்போர்ட்

தங்கம் முக்கிய சப்போர்ட்

தங்கம் விலையானது, செல்லிங் பிரஷரில் இருக்கும் என கடந்த வாரம் முதல் கொண்டே நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1700 டாலர்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த 1700 டாலர்களையும் உடைத்துக் காட்டினால் தங்கம் விலையானது 1500 டாலர்களை கூட தொடலாம். எனினும் குறைந்த விலையானது கணிசமான ஆதரவை தேடும் என்றும் நிபுணர்கள் கூறியது நினைவு கூறத்தக்கது.

பல நிபுணர்களின் கணிப்பு இது தான்?

பல நிபுணர்களின் கணிப்பு இது தான்?

பல நிபுணர்கள் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறையும் என்றே கூறி வருகின்றனர். எனினும் பல நிபுணர்களின் கணிப்பே குறைந்த விலையில் தங்கத்தினை தூண்டும் என்றும் கூறுகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டில் பலத்த ஏற்றம் கண்டு. முதலீட்டாளர்களின் கனவு முதலீடாக இருந்த தங்கம், நடப்பு ஆண்டில் இதுவரையில் 20% சரிவினைக் கண்டுள்ளது. இதனால் விலை இன்னும் சரியலாம்.அதோடு சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது.

விலை குறைய காரணம்

விலை குறைய காரணம்

தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர லாபம், டாலரின் மதிப்பினை வலுவடைய செய்து வருகிறது. இதனால் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. அதோடு வலுவடைந்து வரும் டாலரின் மதிப்பும் தங்கத்தின் மதிப்பினை அதிகமாக மாற்றுகிறது. இதனால் வட்டியில்லா முதலீட்டினை அதிக விலை கொடுத்து வாங்க முதலீட்டார்கள் விரும்பவில்லை. இதனால் இது தங்கம் விலை சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பொருளாதாரம் மீண்டு வருகிறது

பொருளாதாரம் மீண்டு வருகிறது

எதிர்பார்ப்பினை விட பொருளதார வளர்ச்சியானது சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கொரோனா தடுப்பூசிகள் சாதகமாக வந்து கொண்டுள்ளது. எனினும் பொருளாதாரம் மீண்டு வரும் இந்த நிலையிலும் பணவீக்கமும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய சப்போர்ட்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதம் அவுன்ஸூக்கு 1685 டாலர்களாகும். தங்கம் விலையானது இந்த நிலையில் மீண்டும் ஏற்ற காண தொடங்கினால் 1800 டாலர்களை தொடலாம். சரிவினை தொடர்ந்தால் 1605 டாலர்களை கூட தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே எம்சிஎக்ஸ் சந்தையில் 43,900 - 43,600 ரூபாயினையும் தொடலாம் என்றும் கணித்துள்ளனர். எனினும் தங்கம் விலையானது சரிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்போலியோவில் சற்றும் தங்கத்தினையும் சேர்த்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

தற்போதைக்கு மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து இதனை மீடியம் வர்த்தகர்கள் தீர்மானிக்கலாம். ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices last week edges lower, breaks all key supports, down 20% from highs

Gold weekly updates.. Gold prices last week edges lower, breaks all key supports, down 20% from highs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X