சாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. பலத்த சரிவில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா?

தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில் என்னதான் விலை குறைந்தாலும், விலை அதிகரித்தாலும் தங்க நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தால், அவைகள் சாட்சி சொல்லும். தங்கத்தின் மீது மக்கள் எவ்வளவு பிரியம் வைத்துள்ளனர் என்று.

அந்தளவுக்கு இந்திய மக்கள் தங்கத்தின் மீது ஆர்வமாக உள்ளனர். இது வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாமல், இந்தியர்களின் வாழ்க்கையில் அஸ்தஸ்த்தின் அடையாள சின்னமாய் தங்கம் விளங்குகிறது.

உலக நாடுகளிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக, தங்கத்தினை அதிகம் பயன்படுத்துவது இந்தியா தான். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியான பட்ஜெட் அறிக்கையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது. இதனால் இறக்குமதிகள் இனி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன பார்க்கபோகிறோம்?

என்னென்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

கடந்த வாரத்தில் COMEX தங்கம் விலை நிலவரம்?

கடந்த வாரத்தில் COMEX தங்கம் விலை நிலவரம்?

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் முதல் நாள் சற்று ஏற்றத்தினை கண்டு இருந்தாலும், அதற்கு வட்டியும் முதலுமாக அடுத்த நான்கு நாட்களும் தொடர்ச்சியாக பலத்த சரிவினைக் கண்டுள்ளன. 1782 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய் கிழமையன்று அதிகபட்சமாக 1815.20 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்சம். வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 1714.90 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலை. எனினும் முடிவில் 1732.45 டாலர்களாக முடிவடைந்தது.

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலையாக கருதப்பட்ட 1750 டாலர்களை உடைத்துள்ளதோடு, அதற்கு கீழாகத் தான் முடிவடைந்துள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தினை பொறுத்தே இருக்கலாம் என்பதால், கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?


எனினும் வார கேண்டில், மாத கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் செல்லிங் பிரசரிலேயே காணப்படுகிறது. இதனால் வரும் வாரத்திலும் எப்படி இருக்கும் என்பது கடினம். ஏனெனில் வார கேன்டில், மாத கேண்டில், தினசரி கேண்டில் என அனைத்தும் நாளை தொடங்கும் என்பதால், அதன் தொடக்கத்தினை பொறுத்தே தீர்மானிக்க முடியும். ஆக நீண்டகால முதலீடோ அல்லது மீடியம் டெர்மிலோ கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது.

கடந்த வாரத்தில் COMEX வெள்ளி விலை நிலவரம்

கடந்த வாரத்தில் COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 27.555 டாலர்கள் தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமையன்று 28.425 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 26.180 டாலர்கள் வரையில் குறைந்து, பின்னர் முடிவில் 26.440 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையும், நாளை தொடக்கத்தினை பொறுத்தே இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது

கடந்த வாரத்தில் MCX தங்கம் விலை நிலவரம்

கடந்த வாரத்தில் MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, முதல் நாள் சற்று ஏற்றத்தினை கண்டு இருந்தாலும், அதற்கு அடுத்த நான்கு நாட்களும் தொடர்ச்சியாக பலத்த சரிவினைக் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,335 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 46,985 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 45,611 ரூபாய் வரை குறைந்து, 45,739 ரூபாயாக முடிவுற்றது. ஒரு வாரத்தில் மட்டும் 1,300 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,500 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் MCX வெள்ளி விலை நிலவரம்

கடந்த வாரத்தில் MCX வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், முதல் நாள் சற்று ஏற்றத்தினை கண்டு இருந்தாலும், அதற்கு அடுத்த நான்கு நாட்களும் தொடர்ச்சியாக பலத்த சரிவினைக் கண்டுள்ளது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 69,337 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக செவ்வாய்கிழமையன்று 70,699 ரூபாய் வரையில் சென்றது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்த பட்சமாக 66,505 ரூபாய் வரையிலும், அன்று முடிவு விலையானது கிலோவுக்கு 66,261 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. ஒரு வாரத்தில் வெள்ளியின் விலையானது 4000 ரூபாய்க்கு மேல் சரிவினைக் கண்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 11,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 5 நாட்கள் சரிவில் இருந்தது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,024 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4330 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 34,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆக ஒரே வாரத்தில் சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு கிட்டதட்ட 8,960 ரூபாய் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 47,760 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 47,240 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 520 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 72.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 725 ரூபாயாகவும், கிலோவுக்கு 72,500 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 74,400 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 72,500 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1900 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் முக்கிய சப்போர்ட்

தங்கம் முக்கிய சப்போர்ட்

தங்கம் விலையானது 1750 டாலர்களை உடைத்துக் காட்டினால், செல்லிங் பிரஷரில் இருக்கும் என கடந்த வாரம் முதல் கொண்டே நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1700 டாலர்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த 1700 டாலர்களையும் உடைத்துக் காட்டினால் தங்கம் விலையானது 1500 டாலர்களை கூட தொடலாம். எனினும் குறைந்த விலையானது கணிசமான ஆதரவை தேடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

தற்போதைக்கு தங்கம் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது. குறிப்பாக மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து இதனை மீடியம் வர்த்தகர்கள் தீர்மானிக்கலாம். ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+