கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை.. வரும் வாரத்தில் ரூ.50,000 தொடலாம்.. வாங்க சரியான நேரமா..!

தங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே பெரியளவில் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. இது கடந்த வாரத்தில் அவ்வப்போது சரிந்திருந்தாலும், மொத்தத்தில் பார்க்கும்போது ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இது 10 கிராம் விலையானது சுமார் 7,800 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.

ஆக இது குறைந்த விலையில் வாங்கவும், நீண்டகால நோக்கில் நல்ல லாபம் பார்க்கவும் சரியான இடமாக பார்க்கப்படுகிறது

கடந்த வாரத்தில் காமெக்ஸ் தங்கம் விலை

கடந்த வாரத்தில் காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக ஏற்றத்தில் தான் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1844.05 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 1842.80 டாலர்களையும் தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். இதே அதிகபட்ச விலையானது வியாழக்கிழமையன்று 1891.25 டாலர்களை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 1881.85 டாலர்களாகவும் முடிவுற்றது. வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் திங்கட்கிழமை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

கடந்த வாரத்தில் காமெக்ஸ் வெள்ளி விலை

கடந்த வாரத்தில் காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் சற்று சரிந்து காணப்பட்டது. இது கடந்த திங்கட்கிழமையன்று 27.483 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே 24.440 டாலர்களாக குறைந்தபட்ச விலையினை தொட்டது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 28.900 டாலர்களை தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று 27.650 டாலர்களாக முடிவுற்றது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக, தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டிருந்தாலும் ஏற்றத்திலேயே தான் காணப்பட்டது. திங்கட்கிழமையன்று 10 கிராமுக்கு 47,989 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 47,910 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 48,875 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 48,230 ரூபாயாக முடிவுற்றது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று 71,900 ரூபாயாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 74,222 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 70,510 ரூபாயாகவே இருந்தது. முடிவில் 71,049 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 850 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 6600 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 6 நாட்கள் ஏற்றத்திலும், ஒரு நாள் மட்டும் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,440 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 4,591 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,728 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 6,800 ரூபாய் குறைவாகத் தான் காணப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று பெரியவில் மாற்றம் காணவில்லை.. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,690 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 50,060 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 75.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 757 ரூபாயாகவும், கிலோவுக்கு 75,700 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 76,800 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 75,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தற்போதைக்கு மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட பரவல் என்பது அதிகரித்து வரும் நிலையில், அது இன்னும் எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமோ என்ற பயமும் நிலவி வருகின்றது. இதனால் தங்கமானது இன்னும் பாதுகாப்பு புகலிடமாகவே இருக்கலாம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்


தங்கம் விலையானது வரும் வர்த்தக நாட்களில் 10 கிராமுக்கு 50,000 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது இன்னும் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டி விகிதத்தால் பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி சீனா தடை

கிரிப்டோகரன்சி சீனா தடை

சீனா அரசு சில தினங்களுக்கு முன்பு கிரிப்டோகரன்சி சேவையை தடை செய்துள்ளது. அதோடு முதலீட்டாளர்களையும் எச்சரித்துள்ளது. கிரிப்டோ எக்சேஞ்சுகளுக்கும் தடை விதித்துள்ளது. மேலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஆபத்தானது என்றும், இதற்கு நிலையான மதிப்பீடு இல்லை, விர்ச்சுவல் நாணயத்திற்கு விர்ச்சுவலாக விலையை நிர்ணயம் செய்யப்பட்டு இயங்குவதால் இதன் விலையை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் எனவும் சீன அரசு தனது தடை உத்தரவில் தெரிவித்துள்ளது. தங்கத்திற்கு மாற்றாக கருதப்பட்டு வந்த கிரிப்டோகரன்சிகள், தற்போது சீனாவின் உத்தரவால் அது ஒரு போதும் தங்கத்திற்கு ஈடாகது.

தங்கம் வாங்கலாமா?

தங்கம் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+