கிடைத்த வாய்ப்பெல்லாம் போச்சே.. உச்சத்தில் இருந்து சரிந்த தங்கம் விலை.. ஆனாலும் விலை அதிகம் தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது.

ஆக தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், அது மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

கடந்த அமர்விலேயே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 1818.65 டாலர்களாக காணப்படுகின்றது. இது தொடர்ந்து முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகின்றது. இன்றைய தொடக்க விலையும் 1816-க்கு மேலாக உள்ள நிலையில், இது விலை அதிகரிப்பதற்கான குறிகாட்டியாகவே பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின் தீவிர கவனம்

முதலீட்டாளர்களின் தீவிர கவனம்

எனினும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றாலும், எவ்வளவு அதிகரிக்கப்படுமோ என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்தான் ஆய்வில் 91% மேலானவர்கள் வட்டி அதிகரிப்பானது 50 அடிப்படை புள்ளிகள் இருக்கலாம் என கூறியுள்ளனர். ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என முதலீட்டாளார்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

 

கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி

கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி

ஒரு புறம் இப்படி எனில் மறுபுறம் இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் நடப்பு கான்ட்ராக்ட், டிசம்பர் 5ம் தேதி எக்ஸ்பெய்ரி ஆகவுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் அல்லது அடுத்த கான்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்ய நினைக்கலாம். ஆக இதுவே இந்திய சந்தையில் வரவிருக்கும் சந்தை அமர்வுகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

இதன் எதிரொலி ஆபரணத் தங்கத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புறம் பல நிறுவனங்கள் பணி நீக்கம் சம்பள குறைப்பு என பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது தேவையை குறைக்கலாம் என்றாலும், மறுபுறம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரவுள்ள நிலையில், இது தங்கத்தின் தேவையை தாங்கி பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நடப்பு மாதம் தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம்.

குறைந்த விலையில் தங்கம்

குறைந்த விலையில் தங்கம்

தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக தங்கம் விலையானது 2% மேலாக ஏற்றம் கண்டு காணப்படுகிறது. இது டாலரின் மதிப்பானது 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இது தங்கத்தினை ஏற்றம் காரணமாக மாறியுள்ளது. குறைந்த டாலரின் மதிப்பு மற்ற நாணயதாரர்களுக்கு விலை தங்கத்தினை விலை குறைந்ததாக மாற்றியுள்ளது.

வேலை வாய்ப்பு தரவு

வேலை வாய்ப்பு தரவு

எப்படியிருப்பினும் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது இன்று வெளியாகவுள்ளது. இது வட்டி, டாலர் மதிப்புகள் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.அதோடு அமெரிக்காவின் உற்பத்தி தரவானது கடந்த மாதமே இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் காண வழிவகுத்தது. இது இனி எப்படி இருக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

கிடைச்ச வாய்ப்பெல்லாம் போச்சு?

கிடைச்ச வாய்ப்பெல்லாம் போச்சு?

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்று 1700 - 1750 டாலர்களுக்குள்ளேயே இருந்து வந்தது. எனினும் இது தற்போது 1800 டாலர்களை கடந்து நிபுணர்கள் கூறியதை போல காணப்படுகிறது. ஆக குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவும் இருந்திருக்கலாம். எனினும் குறைந்த வாய்ப்பில் வாங்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைத்தது என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது, மொத்தத்தில் கிடைச்ச வாய்ப்பெல்லாம் போச்சு எனலாம். மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க இன்னும் எத்தனை காலம் பொறுத்திருக்க வேண்டுமோ?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.80 டாலர்கள் குறைந்து, 1810.45 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் புராபிட் புக்கிங் காரணமாக குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிக அதிகம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 0.08% குறைந்து, 22.820 டாலராக காணப்படுகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் புராபிட் புக்கிங் காரணமாக குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிக அதிகம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு (பிப்ரவரி கான்ட்ராக்ட்) தொடக்கத்தில் 128 ரூபாய் குறைந்து, 53,767 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. நடப்பு கான்ட்ராக்ட் ஆனது டிசம்பர் 5 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிலோவுக்கு (மார்ச் கான்ட்ராக்ட்) 56 ரூபாய் குறைந்து, 65,363 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியிலும் நடப்பு கான்ட்ராக்ட் ஆனது டிசம்பர் 5 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வணிகம் செய்வது நல்லது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து , 4940 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து , 39,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 5388 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து, 53,880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 70 பைசா அதிகரித்து, 70.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து, 70,500 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices little fall as investors await US fed decision

Gold prices have fallen slightly in the international market. However it is expected to increase in the long time
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X