தங்கம் வாங்குவோருக்கு இன்ப அதிர்ச்சி.. தங்கம் விலை சரிவு.. இனியும் விலை குறையுமா..?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் 8 மாத உச்சத்தில் காணப்பட்ட நிலையில், இன்று தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதே ஆபரணத் தங்கம் விலை சரிவில் காணப்படுகின்றது.

இது அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் உரை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பானது மதிப்பானது சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

டாலரின் மதிப்பு உச்சம்

டாலரின் மதிப்பு உச்சம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது 7 மாத சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தினை விலையுயர்ந்ததாக மாற்றியுள்ளது.

வரவிருக்கும் பணவீக்க தரவின் மத்தியில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு தரவு

வேலை வாய்ப்பு தரவு

வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் மத்தியில் வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்குமா? அல்லது மாற்றம் செய்யப்படாமல் இருக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது இன்றும் தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

வேலை வாய்ப்பு குறித்தான தரவானது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதை காட்டுகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 1876.75 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23.688 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு இன்று சற்று குறையலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 55,920 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 280 ரூபாய் குறைந்து, 68,620 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 5237 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து, 41,896 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 5713 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 250 ரூபாய் குறைந்து, 57,130 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1.20 ரூபாய் குறைந்து, 73.70 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1200 ரூபாய் குறைந்து, 73,700 ரூபாயாக விற்பனை செய்யபட்டும் வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+