தடுமாறும் தங்கம் விலை.. இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு தினங்களாகவே பலத்த சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சற்று தடுமாற்றத்தில் உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் தங்கம் விலையானது இப்படியே குறையுமா? அல்லது இங்கிருந்து ஏற்றம் காணுமா? தற்போது வாங்கி வைக்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே ஆபரணத் தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், வரவிருக்கும் வாரங்களில் விழாக்கால தேவை அதிகரிக்கும் என்பதால் விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்றைய சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இனி விலை குறையுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? இப்படி தடுமாற்றத்தில் உள்ள நிலையில் வாங்கலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளாகவே பலத்த சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சற்று தடுமாற்றத்தில் உள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 3.70 டாலர்கள் அதிகரித்து 1841.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதனால் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை


சர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாக சரிவில் இருந்த வெள்ளியின் விலை, இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலை 0.004 டாலர்கள் குறைந்து, 24.070 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் நேற்றைய முடிவு விலையினை விட, சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. இதனால் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்


சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இரண்டு வர்த்தக அமர்வுகளுக்கு பிறகு, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 88 ரூபாய் அதிகரித்து, 49,165 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று தொட்ட உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 7,035 ரூபாய் சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 51 ரூபாய் குறைந்து, 63,474 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 77,700 ரூபாயுடன் ஒப்பிடும்போது, 14,226 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க சரியான நேரமா?

தங்கம் வாங்க சரியான நேரமா?

தற்போது பலரின் மனதிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி, தங்கத்தினை தற்போது வாங்கலாமா? ஏனெனில் பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில் தற்போது வாங்கலாமா? என்பது தான். ஆனால் நிபுணர்கள் இது தங்கம் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என்கின்றனர். ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில் இருந்து 7000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு வரவிருக்கும் காலம் திருமண விழா பருவம், பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம். ஆக தங்கத்தினை இது வாங்க சரியான இடம் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலையேற்றத்திற்கு என்ன காரணம்

தங்கம் விலையேற்றத்திற்கு என்ன காரணம்

தங்கத்தின் விலை குறையத் தான் பல சாதகமான காரணிகள் உள்ளதே, அப்புறமும் ஏன் அதிகரிக்கிறது? என்ன காரணம்? எதனால் குறைகிறது? தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு சற்று அழுத்தத்தினை கண்டுள்ளது. அமெரிக்காவில் வேலை குறித்தான தரவு, விரைவுல் பொருளாதார மீட்பு குறித்த கவலையை தூண்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்கா தடுப்பூசிக்கு ஒப்புதல்

அமெரிக்கா தடுப்பூசிக்கு ஒப்புதல்

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா பிப்சரின் தடுப்பூசிக்கு, அமெரிக்காவின் அரசாங்க ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமையன்று தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டது. அதோடு இந்த தடுப்பு மருந்துகள் எப்போது அமலுக்கு வருகின்றதே, அப்போதிலிருந்து தங்கம் விலை இன்னும் சரியத் தொடங்கலாம்.

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க, கூடுதல் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் இல்லாத நிலையில், அதுவும் இன்று தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. அதோடு அதிகரித்து வரும் கொரோனா, அமெரிக்காவின் வாராந்திர வேலையின்மை கோரிக்கை மூன்று மாதத்தில் இல்லாத அளவு உச்சத்தினை தொட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.

டாலரின் அழுத்தம்

டாலரின் அழுத்தம்

தங்கத்திற்கான பல காரணிகள் எதிராக இருந்தாலும், தங்கம் விலையில் முக்கிய பங்கினை வகிக்கும் அமெரிக்க டாலரின் மதிப்பானது இன்று சற்று அழுத்தத்தில் உள்ளது. ஆக இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தவிர பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய பலத்த எதிர்பார்ப்பும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கி ஊக்கத் தொகை

ஐரோப்பிய மத்திய வங்கி ஊக்கத் தொகை

மிகவும் பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த வியாழக்கிழமையன்று பொருளாதார மந்த நிலையில் இருந்து நாட்டினை காப்பாற்றும் முயற்சியாக மற்றொரு நாணய தூண்டுதலை அறிவித்துள்ளது. இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனினும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கமானது, மீண்டும் ஒரு பெரிய ஊக்கத்தொகைக்கு வழிவகுக்கலாம்.

இன்று தங்கத்தினை என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தினை என்ன செய்யலாம்?

தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்திலேயே காணப்படும். அதிலும் இன்று வாரத்தின் வர்த்தக இறுதி நாள் என்பதால், சந்தை பெரியளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆக நீண்டகால நோக்கில் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices may down amid coronavirus vaccine optimism

Gold price update.. Gold prices may down amid coronavirus vaccine optimism
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X