Gold Rate update: தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது, குறைந்த மதிப்பில் இருந்து 100.80 என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது.
தங்கம் விலையானது எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 890 ரூபாய் அதிகரித்து, 60,348 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே சர்வதேச சந்தையில் 2003 டாலர் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இது இண்ட்ராடேவில் 1992.59 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
கமாடிட்டி சந்தை நிபுணர்கள், டாலரின் மதிப்பானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2000 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது கடந்த வார இறுதியில் குறைந்திருதாலும், தொடர்ந்து 2000 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகின்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பானது தங்கத்தின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த போக்கு வரும் வாரத்தில் தொடர்ந்தால் அடுத்த முக்கிய லெவலாக 1980 டாலர் மற்றும் 1945 டாலராகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராமுக்கு 59,700 ரூபாய் என்ற லெவலிலும்,அதன் பிறகு 58,500 ரூபாய் என்ற லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 61,371 ரூபாயாகவும், இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2050 டாலர்களையும் எட்டியுள்ளது.

டாலரின் மதிப்பானது குறைந்தபட்ச லெவலில் இருந்து 100.80 என்ற லெவலை எட்டியுள்ளது. இதற்கிடையில் தான் கடந்த வார இறுதியில் அழுத்தத்தில் காணப்பட்டது.
அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறித்தான குறியீடானது கடந்த மார்ச் மாதத்தில் 5% உயர்ந்ததால், தங்கத்தின் விலையும் ஆரம்பத்தில் உயர்ந்தது. எனினும் அமெரிக்காவின் பணவீக்கமும் மெதுவாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரியில் 4.9%ல் இருந்து, 2.7% ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையில் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டங்களில் அமெரிக்க வட்டி விகித அதிகரிப்பினை இனி குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வட்டி அதிகரிப்பினை நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலர் குறியீட்டில் சரிவுக்கு வழிவகுக்கலாம். இது தங்கத்தினை ஊக்குவிக்கலாம்.

அமெரிக்காவின் வங்கித் துறையில் நெருக்கடி நிலவி வரும் நிலையில், இது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கலாம். இதன் தாக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் இருக்கலாம். ஆக வரவிருக்கும் அமர்வுகளில் வட்டி விகிதம் என்பது 0.25% அடிப்படைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications