Gold: தங்கம் விலையானது கடந்த வாரத்தில் மட்டும் 2% ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஒரு வாரத்தில் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது கடந்த வாரத்தில் தான். இதற்கிடையில் வரும் வாரத்தில் எப்படியிருக்கும்? தங்கத்தினை வாங்கலாமா? வேண்டாமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? விலை குறையுமா? குறையாதா? வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது வெளியான நிலையில், மே 2020ல் இருந்து பார்க்கும்போது குறைந்த அளவாகும்.

கடந்த வாரத்தில் வெளியான பண்ணை அல்லாத வேலை தரவானது வெளியான நிலையில், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் டாலரின் மதிப்பு, பத்திர சந்தை என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

வரவிருக்கும் அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால தங்கத்தின் விலை அதிகரிக்கலாம். குறுகிய கால நோக்கில் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், நீண்டகால நோக்கில் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எப்படியிருப்பினும் இதற்கிடையில் வரவிருக்கும் முக்கியமாக வேலை வாய்ப்பு தரவுகள், உற்பத்தி குறித்தான தரவுகள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
கச்சா எண்ணெய் உற்பத்தியினை ஓபெக் நாடுகள் குறைத்துள்ள நிலையில், இதுவும் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்தினை தூண்டலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக அமையலாம்.
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலான 2000 டாலர்களை எட்டியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் 2% மேலாக காணப்படுகின்றது. இது 2050 டாலர் மற்றும் 2075 உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே இந்திய சந்தையில் முக்கிய லெவல்களாக 59,700 ரூபாய் முதல் 58,500 ரூபாயாகவும், இதே மேலாக ஏற்றம் காணும்பட்சத்தில் 61,700 ரூபாயாகவும், அடுத்த முக்கிய லெவல் ஆக 62,500 ரூபாயினை எட்டலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொருளாதாரமும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், பணவீக்கமும் உச்சத்தினை எட்டி வரும் நிலையில் இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். அமெரிக்காவின் பணவீக்கமானது 41 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் காணப்படும் நிலையில், பெடரல் மத்திய வங்கியின் இலக்கினை எட்டும் வரையில் வட்டி அதிகரிக்கப்படும் என முன்னதாக மத்திய வங்கியானது தெரிவித்திருந்தது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications