தங்கம் விலை வரும் வாரத்தில் இப்படி தான்.. சூப்பரான நிபுணர்களின் கணிப்பு..!

தங்கம் விலையானது இந்த மாதத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக செல் ஆஃபில் இருந்து வருகின்றது. இந்த விலையுயர்ந்த மெட்டல் விலையானது 1720 - 1730 என்ற லெவலில் இருந்து ஏற்றம் கண்டு, 1790 லெவலை எட்டியது. அதன் பிறகு மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது முன்னதாக 47.60 என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இது 46.10 ஆக குறைந்துள்ளது.

இந்த விகிதமானது 2020ன் நடுத்தர காலத்தில் இருந்து பார்க்கும்போது சரிவினைக் கண்டுள்ளது.

பலவீனமான டாலர்

பலவீனமான டாலர்

இந்த சேவை விகிதமானது இரண்டாவது முறையாக இந்தளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது. கடந்த நவம்பர் 3 அன்று 1616 டாலர்களாக இருந்து அதிகரித்தது. இது மீண்டும் 1786 என்ற லெவலை எட்டியது.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் மெதுவான விகித உயர்வு பாதைக்கு மத்தியில், அமெரிக்கா டாலரின் மதிப்பு அதிகபட்சமாக 113.92 டாலர் என்ற லெவலை எட்டியது. நவம்பர் 15 அன்று 105 என்ற லெவலை எட்டியது. தொடர்ந்து டாலரில் பலவீனம் நீடித்து வருகின்றது.

பத்திர சந்தையும் சரிவு

பத்திர சந்தையும் சரிவு

அமெரிக்க டாலரைன் தொடர்ந்து பத்திர சந்தையும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இதற்கிடையில் சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் அங்கு கச்சா எண்ணெய் விலையானது, சரிவினைக் கண்டு வருகின்றது. இது தங்கம் விலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பணவீக்கம் சரியலாம்

பணவீக்கம் சரியலாம்

பல்வேறு கமாடிட்டிகளின் விலை தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் சரிவினக் கண்டு வருகின்றது. இது பணவீக்கத்தினையும் கட்டுப்படுத்தலாம். இதன் காரணமாக தங்கம் விலையிலும் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம்.

வரவிருக்கும் நாட்களில்

வரவிருக்கும் நாட்களில்

இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் சந்தையில் விற்பனை குறித்தான வெளிவரவுள்ள நிலையில், அதில் முதலீட்டாளார்கள் கவனம் செலுத்தலாம். இது தவிர உற்பத்தி குறித்தான தரவு, மற்றும் பண்ணை அல்லாத பே ரோல் குறித்தான தரவானது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக வரவிருக்கும் நாட்களில் இது தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் மெதுவான வேகத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1785 டாலரை உடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் தங்கம் விலையானது 1720 - 1730 டாலரை அடிக்கடி தொடலாம். எனினும் வரவிருக்கும் தரவுகளை பொறுத்து 1700 டாலர் என்ற லெவலை தொடலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 4926 ரூபாயாகவும், சவரனுக்கு 39,408 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5374 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,740 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 67.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கவனமுடன் வர்த்தகம் செய்யனும்

கவனமுடன் வர்த்தகம் செய்யனும்

எனினும் வரவிருக்கும் நாட்களில் வெளியாகவிருக்கும் தரவினை பொறுத்து தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடம் வணிகம் செய்வது நல்லது. ஆபரணத் தங்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+