தங்கம் விலை வீழ்ச்சி காணுமா? 2020ஐ போல் இருக்காது.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது உள்ளூர் நிபுணர்கள் முதல் கொண்டு, வெளிநாட்டு நிபுணர்கள், தனி நபர்கள் என அனைவரும் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், தங்கம் விலையானது ஏற்றம் காணுமா? என்ற சந்தேகமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்வது? விலை குறைந்துவிடுமோ என்ற குழப்பமும் இருந்து வருகின்றது. ஆக இந்த நேரத்தில் தங்கத்தினை வாங்கலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறையக்கூடும். மேலும் முதலீட்டாளர்கள் பங்கு, கமாடிட்டி, பத்திரம் உள்ளிட்ட மற்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கலாம். இதனால் தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை எதிர்பார்ப்பு

தங்கம் விலை எதிர்பார்ப்பு

நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸின் தாக்கம் மோசமடையாவிட்டால், கடந்த 2020ஐ போலவே தங்கம் விலை இருக்காது என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக மொத்தத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் பட்சத்தில் தங்கம் விலையானது குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2020ல் எவ்வளவு லாபம்?

2020ல் எவ்வளவு லாபம்?

கடந்த ஆண்டில் தங்கம் விலையானது இந்திய சந்தையில் 23% லாபம் கொடுத்துள்ளது. இது அடுத்தாண்டிலும் ஏற்றம் காணலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், 2020ல் முன்னோடியில்லாத கொரோனாவின் காரணமாக சீர்குலைந்த பொருளாதாரத்தினை மீட்டெடுக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இதனால் தங்கம் விலையானது அதிகரித்தது. இது மிகப்பெரிய பணவீக்கம், வட்டி குறைப்பு, கடன், இயல்பு நிலை என பல காரணங்களினால் பாதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஆதரவு கொடுக்கலாம்

தடுப்பூசி ஆதரவு கொடுக்கலாம்

எனினும் பரவி வரும் கொரோனாவினைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது, கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆக இது செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதனால் பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும், பங்கு சந்தைகள் ஏற்றம் காணும், வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தங்கத்திற்கான ஒட்டுமொத்த கண்ணோட்டம் நேர்மறையாக உள்ளது. ஆக வைரஸின் நிலைமை மோசமாக மாறாவிட்டால், 2020 நிலை மீண்டும் வராது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடிப்படை உலோகங்கள் நிலை எப்படி?

அடிப்படை உலோகங்கள் நிலை எப்படி?

கடந்த ஆண்டில் அடிப்படை உலோகங்களின் விலையானது, கடந்த மார்ச் மாதத்தில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டது. எனினும் இது பின்னர் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டது. கொரோனாவின் காரணமாக 2019 இறுதியில் சீனாவில் லாக்டவுன், 2020 தொடக்கத்தில் இருந்தே பல நாடுகளும் லாக்டவுனை அமல்படுத்தின. இதன் காரணமாக அடிப்படை உலோகங்களின் தேவைகளும் வெகுவாக குறைந்தன. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து அடிப்படை உலோகங்களும் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டன.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

எனினும் அதன் பின்னர் ஒரு நல்ல ஏற்றத்தினைக் கண்டுள்ளன. ஏனெனில் சீனாவில் வழக்கம்போல் தொழிற்சாலைகள் இயக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக காப்பர், ஜிங்க், நிக்கல் உள்ளிட்ட விலைகள் ஏற்றம் கண்டன. எனினும் நடப்பு ஆண்டில் கொரோனா தடுப்பூசிகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது அடிப்படை உலோகங்களுக்கும் சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா – சீனாவில் தேவை அதிகரிக்கும்

அமெரிக்கா – சீனாவில் தேவை அதிகரிக்கும்

குறிப்பாக சீனாவில் வளர்ச்சி விகிதமானது நடப்பு ஆண்டில் நன்கு இருக்கும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதனால் சீனாவில் உலோகங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே அமெரிக்காவிலும் உலோகங்கள் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இவற்றின் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices may not repeat last year performance

Gold latest updates.. Gold prices may not repeat last year performance
Story first published: Sunday, January 3, 2021, 13:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X