தங்கம் விலை செப்டம்பரில் செம சரிவைக் காணும்.. நல்ல விஷயம் தானே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போகிற போக்கினை பார்த்தால், சிறு போட்டு மூக்குத்தியாவது வாங்க முடியுமா? இன்னும் தங்கம் விலை எவ்வளவு தான் அதிகரிக்குமோ என்று அலட்டிக் கொண்டவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல விஷயம் காத்திருக்கு. அது தங்கம் விலை குறையும் என்பது தான்.

 

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 1953 என்ற லெவலில் வர்த்தகமாகி வருகிறது. இந்த சர்வதேச கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது செப்டம்பர் மாதத்தில் சரியலாம் என்று கணித்துள்ளனர்.

இது குறித்து வெளியான ஒரு அறிக்கையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை, அவுன்ஸுக்கு 1660 டாலர்கள் வரை செல்லலாம் என்று கூறுகிறார்கள். இது அடுத்த நல்ல சப்போர்ட் ஆக இருக்கும் என்றும், இந்த இடத்தில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் கூறுகிறார்கள்.

சுழற்சி முறை தான்

சுழற்சி முறை தான்

தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களின் விலையானது மிகவும் சுழற்சியானது. ஒவ்வொரு ஆறு மாதங்களும் ஒரு இடை நிலை சுழற்சியினை உருவாக்குகின்றன. கடைசியாக இந்த சுழற்சியானது கடந்த மார்ச் மாதத்தில் வந்தது. தற்போதைய சரிவு இப்போது தான் தொடங்குகிறது. இது சரிவானது அடுத்த 4 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த சப்போர்ட்

அடுத்த சப்போர்ட்

ஆக மேற்கண்டு கூறியதை போல அடுத்த சப்போர்ட் லெவல் ஆனது, செப்டம்பர் பிற்பாதியிலோ அல்லது அக்டோபர் மாதத்திலோ இருக்கலாம் என்று கூறியுள்ளனர். தங்கம் தற்போதைய சந்தையில் சக்தி வாய்ந்த காளையாக உள்ளது. ஆக நாங்கள் தங்கத்தினை விற்க பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் இன்றைய சந்தை நிலவரமானது முன்னெப்போதும் விட நிலையற்றவையாக உள்ளது.

இந்திய கமாடிட்டி வர்த்தகம்
 

இந்திய கமாடிட்டி வர்த்தகம்

ஆக நீங்கள் உங்கள் பணத்தினை இழக்க கூடும். இதனால் தங்கம் விலையானது சரிந்தால் நீங்கள் வாங்கி வைக்கலாம். சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிந்தால், நிச்சயம் அது இந்தியா கமாடிட்டி வர்த்தகத்திலும் சரிவினைக் காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர். உண்மையில் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதிகரிக்கவே வாய்ப்புகள்

அதிகரிக்கவே வாய்ப்புகள்

இது ஒரு புறம் இப்படி இருக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சிஎன்பிசி அறிக்கையில் தங்கம் விலையானது கடந்த இரண்டு வருடங்களில் தங்கம் விலையானது 75% அதிகரித்துள்ளது. இது இன்னும் புதிய உச்சத்தினையே தொட்டு வருகிறது. அதிலும் தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலீடு இருக்கலாம்

முதலீடு இருக்கலாம்

இந்திய முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்போலியோவில் தங்கம் முதலீடு என்பது 5 - 15% இருக்கலாம் என்று ஐசிஐசிஐ டைரக்ட் அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் தங்கம் விலையானது நேர்மைறையாக உள்ள நிலையில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். சர்வதேச நிபுணர்கள் கூறுவது போல தங்கம் விலையானது குறைந்தால், அது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

இது நல்ல வாய்ப்பு தான்

இது நல்ல வாய்ப்பு தான்

நிபுணர்கள் கூறுவது போல தங்கம் விலையானது விலை குறைந்தால் மட்டுமே வாங்கி வைக்கலாம். ஆக நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான். ஆக விலை குறைந்தால் வாங்கி வைக்கலாம்.

நிச்சயம் கொரோனா தடுப்பூசி என்பது நடைமுறைக்கு வந்தாலே தங்கம் விலையானது குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கவனித்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices may reach $1660 in September

Gold price update.. Gold prices could touch support near $1,660 in late September. It’s a next buying target opportunity.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X