நகை பிரியர்கள் ஏமாற்றம்.. இன்று தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையானது வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், தொடர்ந்து சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.

இதே இந்திய சந்தையிலும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் காரணமாக ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது.

பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு குறித்தான பேசவுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தொடர்ந்து பணவீக்கம் என்பது உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இது இன்று மீண்டும் 1750 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. இது தொடர்ந்து பெரியளவில் ஏற்றம் காணவிட்டாலும், ஏற்றம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

எனினும் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது வாங்கும் செலவினங்களை அதிகரிக்கலாம். ஏற்கனவே பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு சரிவுக்கு வழிவகுக்கலாம். மொத்தத்தில் ரெசசன் அச்சத்தினை இது அதிகரிக்கலாம். இது ஒரு புறம் தங்கத்தினை வாங்குவதை குறைக்க வழிவகுக்த்தாலும், மறுபுறம் முதலீட்டாளார்கள் சிறந்த ஹெட்ஜிங் ஆக பயன்படுத்தலாம்.

தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

இதற்கிடையில் தான் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், இன்று உரையாற்ற உள்ளார். இந்த உரையில் வட்டி அதிகரிப்பு குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியாகலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தேவை குறையலாம்

தேவை குறையலாம்

இதற்கிடையில் தங்கம் விலையானது 52,770 என்ற லெவலில் காணப்படுகின்றது. இதற்கிடையில் முக்கிய லெவல் 52,620 ரூபாயாகவும் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், கட்டுப்பாடுகளும் அதிகமாக இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு தங்கத்தின் தேவையினை குறைக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

தங்கத்திற்கு ஆதரவு கொடுக்கலாம்

தங்கத்திற்கு ஆதரவு கொடுக்கலாம்

கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இதனால் இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்க டாலர் மதிப்பு, சீனாவில் நிலவி வரும் நிலை, ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனை என பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

முதலீட்டாளார்களின் கவனம்

முதலீட்டாளார்களின் கவனம்

இன்று ஜெரோம் பவலின் பேச்சு மற்றும் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தும் எனலாம். ஆக இது முதலீட்டாளர்கள் மத்தியில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

டெக்னிக்கலாக எப்படி?

டெக்னிக்கலாக எப்படி?

தங்கம் விலையின் முக்கிய சப்போர்ட் லெவலானது 1738 - 1724 டாலர்களாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 1758 - 1770 டாலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வெள்ளியின் சப்போர்ட் விலை 20.80 - 20.65 டாலராகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் - 21.42 - 22.58 டாலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 52,120 - 51,850 ரூபாயாகவும்,இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 52,550 - 52,680 ரூபாயாகவும் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 60,450 - 59,850 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 61,520 - 61,840 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது தொடர்ந்து 107 - 106 என்ற லெவலில் காணப்படுகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் சற்று அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாகக்த்தினை ஏற்படுத்தலாம்.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.75 டாலர்கள் அதிகரித்து, 1752.20 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 0.17% அதிகரித்து, 21.240 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் உச்சத்தினை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் 21.400 டாலர்களை உடைத்தால் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. அதுவரையில் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 337 ரூபாய் அதிகரித்து, 52,470 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 509 ரூபாய் அதிகரித்து, 61,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் மீடியம் டெர்மில் குறைந்து பின்னரே அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 20 ரூபாய் அதிகரித்து, 4936 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 39,488 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 5385 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 176 ரூபாய் அதிகரித்து, 53,850 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்றூ குறைந்து, 68 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 68,000 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+