சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் என்றால் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள் யாரேனும் உண்டா? அப்படி இருந்தாலும் அத மிக குறைவாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் நம் பெண்களுக்கு.

அதிலும் பண்டிகை கால பருவம் என்றால் சொல்லவா வேண்டும்?. அதிலும் இன்றைய நடுத்தர வர்க்கத்தில், மாதா மாதம் பணம் கொடுத்து தங்கம் வாங்கும் பழக்கம் நம் நாட்டில் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது

சரி நடப்பு வாரத்தில் தங்கம் விலை எப்படி இருந்தது? இனி எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

சிங்கப் பாதையில் ரிலையன்ஸ் ஜியோ.. 2வது காலாண்டில் லாபம் 185% அதிகரிப்பு..!சிங்கப் பாதையில் ரிலையன்ஸ் ஜியோ.. 2வது காலாண்டில் லாபம் 185% அதிகரிப்பு..!

நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

அப்படி மாதா மாதம் செலுத்துவோரும் இந்த தீபாவளி சமயத்தில் தான் தங்கம் வாங்க முற்படுகின்றனர். இப்படி கூலி வேலைக்கு போனாலும் சிறிது சிறிதாக சேர்த்து, தங்களின் குழந்தைக்கு தங்கம் வாங்கி அணிவிக்கின்றனர். ஆக தங்கம் விலையானது எவ்வளது தான் அதிகரித்தாலும், நாங்கள் வாங்குவதை வாங்கியே தான் தீருவோம் என்பது போலத் தான், இன்றும் நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

இதனால் வரவிருக்கும் மாதங்களில் தங்கத்தின் தேவையானது நிச்சயம் அதிகரிகத்தான் செய்யும். அதிலும் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவையானது நிச்சயம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சர்வதேச நிபுணர்கள் முதல் உள்நாட்டு நிபுணர்கள் தங்கத்தின் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் தங்கத்தின் தேவையானது, இன்னும் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய கால நோக்கில் தங்கம் விலை

குறுகிய கால நோக்கில் தங்கம் விலை

சரி குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும், கடந்த வாரத்தில் எப்படி இருந்தது. வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? நீண்ட கால நோக்கில் எப்படி இருக்கும்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர் வாருங்கள் பார்க்கலாம். நவம்பர் முதல் வாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிகழ்வான, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதுமட்டும் அல்ல அமெரிக்காவின் வட்டி வீதம் முடிவு மற்றும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் உட்பட சில முக்கிய தரவுத் தொகுப்புகளும் வரவுள்ளன. இதனால் தங்கம் விலையானது பெரும் ஏற்ற இறக்கத்தில் காணப்படும்.

தங்கம் விலை சற்று குறையலாம்

தங்கம் விலை சற்று குறையலாம்

ஆய்வாளர்களின் கருத்துப்படி தங்கம் விலையானது பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருவதால் வரும் வாரத்தில் முதலீட்டாளர்கள் பட்டியலில் குறைவான இடத்தினையே பிடிக்கலாம். இதனால் தங்கம் விலை குறையலாம். குறையாவிட்டாலும், அதிக மாற்றம் இல்லாமல் காணப்படலாம். ஆனால் அதிக ஏற்றம் காணுமா? என்பது சந்தேகம் தான். எனினும் நீண்டகால நோக்கிலான காரணிகள் எதுவும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை நிலவரம்

கடந்த வாரத்தில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது அவ்வப்போது சற்று ஏற்றத்தினை கண்டிருந்தாலும், முடிவில் சரிவிலேயே முடிவடைந்துள்ளது, கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1906 டாலர்களாக தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1878.70 டாலர்களாகவே முடிவடைந்தது. இதனுடன் ஒப்பிடும்போது 27.3 டாலர்கள் சரிவிலேயே காணப்படுகிறது. இதே கடந்த வியாழக்கிழனையன்று வந்த குறைந்தபட்ச விலையுடன் ஒப்பிடும்போது 46.8 டாலர்கள் குறைந்து, சற்று ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த வாரத்தில் வெள்ளி விலை நிலவரம்

கடந்த வாரத்தில் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியினை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் தங்கத்தினை போலவே, நடப்பு வாரத்தில் நல்ல சரிவினைக் கண்டுள்ளது. கடந்த திங்களன்று 24.750 டாலர்களாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று 22.625 டாலர்களாக குறைந்தது. ஆக மொத்தத்தில் வெள்ளியின் விலையானது 2.125 டாலர்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது நடப்பு வாரத்தில் சவரனுக்கு 392 ரூபாய் குறைந்தே காணப்படுகிறது. கடந்த ஞாயிற்று கிழமை முதல் இன்று வரையில் பார்க்கும் போது 5 நாட்களில் 704 ரூபாய் அதிகரித்தும், இதே இரண்டு நாட்களில் 312 ரூபாய் குறைந்தும் காணப்படுகிறது.
நடப்பு வாரத்தில் குறைந்தபட்சமாக சவரனுக்கு 37,776 ரூபாயாகவும், அதிகபட்சமாக 38,184 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது நடப்பு வாரத்தில் ஒரு நாள் தவிர மீதமுள்ள ஆறு நாட்களில் 5 நாட்கள் ஏற்றத்திலும், 1 நாள் விலையில் மாற்றமில்லாமலும் காணப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை முதல் சனிகிழமை வரையில் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்தே காணப்பட்டுள்ளது.

நடப்பு வாரத்தில் குறைந்தபட்சமாக கிலோவுக்கு 61,500 ரூபாயாகவும், அதிகபட்சமாக 65,300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் தூய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் தூய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் தூய தங்கத்தின் விலையானது நடப்பு வாரத்தில் 10 கிராமுக்கு 630 ரூபாய் அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த ஞாயிற்று முதல் இன்று வரையில் பார்க்கும் போது மொத்தம் 1,150 ரூபாய் அதிகரித்தும், இதே மூன்று நாட்களில் 520 ரூபாய் குறைந்தும் காணப்படுகிறது.
நடப்பு வாரத்தில் குறைந்தபட்சமாக 10 கிராம் தங்கம் 51,410 ரூபாயாகவும், அதிகபட்சமாக 52,060 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் தங்கம் ஒரு பார்வை

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் தங்கம் ஒரு பார்வை

எம்சிஎக்ஸ் தங்கத்தினை பொறுத்தவரையில் கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் 50,690 ரூபாயாக தொடங்கிய நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலையானது, அதிகபட்சமாக 51,125 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக வியாழக்கிழமையன்று 50,070 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 50,699 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் வார தொடக்கத்தில் ஏற்றம் காண தொடங்கினாலும், பிற்பாதியில் சற்று சரிவினைக் கண்டது.

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளியினை பொறுத்த வரையில் கடந்த செவ்வாய்கிழமையன்று கிலோவுக்கு அதிகபட்சமாக 62,580 ரூபாயினை தொட்டது. ஆனால் அடுத்த நாளே குறைந்தபட்சமாக 59,100 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 60,865 ரூபாயாக முடிவடைந்துள்ளது. கிட்டதட்ட வாரத்தின் முற்பாதியில் ஏற்றம் கண்ட அளவுக்கு, பிற்பாதியில் சரிவினையே கண்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு ஏற்றம் காணலாம்

தேர்தலுக்கு முன்பு ஏற்றம் காணலாம்

அதெல்லாம் சரி அடுத்த வாரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும்? அடுத்த வாரத்தில் மட்டும் அல்ல, அடுத்த சில வாரங்களுக்கு அதாவது, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவு வரும் வரையில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் யார் ஜெயிர்ப்பார்கள் என்ற கணிப்பில், தங்கம் விலை ஏற்ற இறக்கத்தினை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயம் ஊக்கத்தொகை

நிச்சயம் ஊக்கத்தொகை

அதிலும் வரவிருக்கும் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் உண்மையான வர்த்தக நாட்களாக இருக்கும். யார் தேர்தலில் ஜெயித்தாலும், சந்தையில் குறிப்பிடத்தக்க ஊக்கத் தொகை தொகுப்பு நிச்சயம் இருக்கும். அப்படி வரும் போது தங்கம் விலை மிக நேர்த்தியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய கால நோக்கில் தங்கம் லெவல்கள்

குறுகிய கால நோக்கில் தங்கம் லெவல்கள்

தங்கம் விலையானது குறுகிய கால நோக்கில் அவுன்ஸூக்கு 1,850 டாலர்களை தொடலாம். இது ரெசிஸ்டன்ஸ் லெவல் 1920 - 1925 டாலர்கள் வரை இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஒரு வேளை 1925 டாலர்களை உடைத்தால். இது 1,970 டாலர்களை வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. 2,000 டாலர்களை கூட தொட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

அடுத்த வாரத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாகலாம்

அடுத்த வாரத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாகலாம்

இதே மற்றொரு அறிக்கையில், அடுத்த வாரம் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். ஆனால் தேர்தலுக்கு பின்பு, அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொடலாம். 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் 2500 டாலர்களை கூட தொடலாம் என்றும் வால்ஷ் டிரேடிங் இணை இயக்குனர் சீன் லஸ்க் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதிபர் தேர்தலை பொறுத்த வரையில் யார் ஜெயிப்பார்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. தேர்தலுக்கு பின் வரவிருக்கும் ஊக்கத்தொகை தான் பெரும் எதிர்பார்ப்பே என்கின்றனர் நிபுணர்கள்.

தேர்தலுக்கு பின்பு தங்கம் எப்படி இருக்கும்?

தேர்தலுக்கு பின்பு தங்கம் எப்படி இருக்கும்?

தற்போது அமெரிக்கா மற்றும், ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் லாக்டவுன் இருக்குமோ என்ற பயமும் எழுந்துள்ளது. இது மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தேர்தலுக்கு பின்பும் தங்கம் விலையை, இவையெல்லாம் ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு பின் கவனிக்க வேன்டியவை

தேர்தலுக்கு பின் கவனிக்க வேன்டியவை

தேர்தலே முடிவடைந்தாலும், அடுத்து வரும் வியாழக்கிழமையன்று ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து வேலையின்மை குறித்த டேட்டாவும் வெளியாக உள்ளது. ஆக இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தற்போது தங்கத்தினை வாங்கி வைக்கலாம். ஏனெனில் இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும் போது நல்ல குறைவான விலையிலேயே காணப்படுகிறது. ஆக இது வாங்க நல்ல வாய்ப்பு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices may struggle in this week

Gold prices may struggle in this week, but long term traders can buy these levels
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X