அச்சச்சோ தங்கம் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்.. எப்போது விலை குறையும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய செய்தித் தாள்களாகட்டும், டிவியில் ஆகட்டும் தங்கம் பற்றிய செய்தி இல்லாமல் இருப்பதில்லை. போகிற போக்கை பார்த்தால் அடிப்படை தேவைகளில் தங்கமும் ஒன்று என்றளவிற்கு ஆகிவிடும் போல. அந்தளவுக்கு ஆண்கள் பெண்கள் என பாகுபாடு இல்லாமல் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கம் பற்றிய செய்திகள் அனைவரும் விரும்பி படிக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது.

தங்கம் விலை குறைந்து வருகிறது. அதிகளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதைத் தான் நாம் கடந்த சில வாரங்களாக படித்திருப்போம். ஆனால் thegoldforcast.com என்ற இணையதளத்தில் வரும் காலங்களில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்று வெளியிட்டுள்ளது.

டிரம்ப் மீது குற்றச்சாட்டு

டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அந்த நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அத்துடன் தன் மீதான புகாரை விசாரிக்க தடை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும்

தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும்

குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு டிரம்ப் பதவி காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டன தீர்மானம் மீது அமெரிக்க செனட் சபையில் அடுத்த மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் முதலீடுகள் குறைந்துள்ளது. இதனால் வரவிருக்கும் காலங்களில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலையில் வர்த்தகமாகிறது?
 

என்ன விலையில் வர்த்தகமாகிறது?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சராசரியாக 1,450 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போதைய விலையிலிருந்து தங்கத்தின் விலை இன்னும் 15 சதவிகிதம் உயரக்கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது வரும் காலங்களில் 1650 - 1700 டாலர் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் வரவிருக்கும் வாரங்களில் இந்த விலையானது அதிகரிக்கும் என்றும் கிட்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய சந்தைகளிலும் அதிகரிக்கும்

இந்திய சந்தைகளிலும் அதிகரிக்கும்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது, இந்திய சந்தைகளிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைகளில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தங்கத்தின் விலையானது சரிந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களால், பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய ஃபெடரல் வங்கி வட்டி குறைப்பை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முதலீடாக நினைக்கலாம்

சிறந்த முதலீடாக நினைக்கலாம்

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைந்தால் இந்தியாவில் ஏன் தங்கம் விலை உயர வேண்டும்? தங்கத்தை பொறுத்தவரை அது ஒரு சர்வதேச நுகர்வு பொருள் மட்டும் அல்ல. இது ஒரு வியாபார மற்றும் முதலீட்டு பொருளாகும். அதிக பணம் வைத்திருப்பவர்கள் அதை பாதுகாப்பாக முதலீடு செய்து கொள்ள நினைப்பார்கள். இப்படிப்பட்ட அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 2 - 2.25% குறைக்க கடந்த வாரம் முடிவு எடுத்திருக்கிறது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் குறைந்த வட்டியில் முதலீடு செய்வதை விட, தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என்று முதலீட்டாளர்கள் நினைக்கலாம்.

செலவு அதிகரிக்கும்

செலவு அதிகரிக்கும்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் அதை இறக்குமதி செய்யும், இந்தியாவிலும் விலை கூடும். இதனால் வரும் வாரங்களில் விலை அதிகரிக்கலாம். இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமாடிட்டி சந்தையில் 38,046 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சர்வதேச சந்தையில் 1,483 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் 1650 டாலர் - 1700 டாலர் வரை செல்லலாம் என்ற நிலையில், இந்தியாவில் தங்கத்தின் விலையானது விலை அதற்கேற்றவாறு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆபரணத் தங்கத்தின் தேவையானது இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இறக்குமதி வரி அதிகரித்த பின் சர்வதேச தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தங்கம் விலை அதிகம் தான். இந்த நிலையில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices may surprise for coming months

Gold prices may increase 15% from current level, economist expect gold prices are looking $1,650 - $1,700 levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X