கொரோனா பீதிய விடுங்க பாஸ்.. தங்கம் விலை ரூ.50,000 - 55,000 தொடலாமாம்.. வல்லுனர்கள் கணிப்பு..!

பட்டிதொட்டியெல்லாம் உலகெங்கும் பாகுபாடு இல்லாமல் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுக்க மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

அதிலும் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே இந்த கொரொனாவால் ஆட்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொழில் துறைகளும், அலுவலகங்கள் என அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

கொரோனாவுக்கு எதிராக போர்கொடி

கொரோனாவுக்கு எதிராக போர்கொடி

இதன் காரணமாக சர்வதேச சந்தைகள், பத்திர சந்தைகள், மியூச்சுவல் பண்ட் என அனைத்தும் சரிந்து வருகின்றன. கொரோனாவால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஈடுகட்ட, பல நாடுகளின் அரசுகளும், கொரோனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. பலவேறு அதிரடி மீட்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

பல மடங்கு வேகத்தில் பரவி வருகிறது

பல மடங்கு வேகத்தில் பரவி வருகிறது

ஆனால் அவையாவும் இது வரை கைகொடுத்ததாக தெரியவில்லை எனலாம். ஏனெனில் அப்போது பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டாலும், தொடர்ந்து உயர்வைக் காணவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் சீனாவில் கொரோனா கட்டுப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதைவிட பல மடங்கு வேகத்தில் பல்வேறு நாடுகளில் கட்டுக்கு அடங்காமல் பரவி வருகிறது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

கடந்த 2019ல் இருந்தே ஏற்றம் காணத் தொடங்கிய தங்கமானது கடந்த ஆண்டில் 23.74% லாபத்தினை பதிவு செய்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலரினை, இந்திய மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 50,000 - 55,000 ரூபாயினை தொடலாம் எனவும் கூறப்படுகிறது.

இவ்வளவு லாபம் கொடுத்துள்ளது?

இவ்வளவு லாபம் கொடுத்துள்ளது?

இது மட்டும் அல்ல நடப்பாண்டில் இதுவரை இந்த விலை மதிப்பற்ற உலோகம் 6,794 ரூபாய் அல்லது 17.31% ஏற்றம் கண்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதே இதுவரை நடப்பாண்டில் 15.19% வரை வருவாயைக் கொடுத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. மேலும் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்க்ம விலையானது தொடர்ந்து ஏற்றம் காணவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சில்லறை முதலீடு அதிகரிக்கும்

சில்லறை முதலீடு அதிகரிக்கும்

நாட்டில் நிலவி வரும் பல்வேறு விதமான நெருக்கடியின் மத்தியில் முதலீட்டாளர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி முதலீடு செய்யும் இடமான தங்கம் மாறியுள்ளது. தற்போது சராசரியாக சில்லறை முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 10 -15% ஆகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30% வரை இது இருக்கும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இவ்வளவு அதிகரிக்குமா?

இவ்வளவு அதிகரிக்குமா?

இதே மணி கண்ட்ரோலில் வெளியான அறிக்கையின் படி, தங்கம் விலையானது ஏற்றம் காணவே வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிச்சயம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்கம் விலையானது ஏற்றம் காணும். அதிலும் விலை அவுன்ஸூக்கு 2000 டாலரினை தொடலாம் என்றும் கூறப்படுகிறது. உலகளவில் தங்கம், மட்டும் தான் தற்போதைக்கு சிறந்த முதலீடாக கருதப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜீவல்லரி தங்கம் எப்படி?

ஜீவல்லரி தங்கம் எப்படி?

2 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் சில்லறை சந்தையானது, குறிப்பாக குடி பத்வா, அக்ஷய திருதி மற்றும் கோடைகால திருமண சீசன் என அனைத்தும் முடங்க வாய்ப்புள்ள நிலையில், மார்ச் இறுதி முதல் மே வரை 15-20% வரை, இத்தொழில் துறை 15,000 கோடி வருவாய் இழப்பினை சந்திக்க வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இன்று சர்வதேச சந்தையில் விலை

இன்று சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரை இன்று தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 14.30 டாலர்கள் அதிகரித்து 1,775.70 டாலர்களாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. திங்கட்கிழமையன்று காலையில் சற்று வீழ்ச்சியுடன் தொடங்கிய தங்கம் விலையானது முடிவில் மீண்டும் ஏற்றத்தினை கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரை இன்று வெள்ளி விலையானது, 0.490 டாலர் அதிகரித்து 16.027 டாலர்களாக அதிகரித்துள்ளது. தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவனிக்கதக்கது. வெள்ளியினை பொறுத்த வரையில் அதிகளவு தேவை இல்லாத நிலையில் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம்

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம்

இந்திய கமாடிட்டி வர்த்தகர்த்தினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது இன்று 10 கிராமிற்கு 9631 ரூபாய் அதிகரித்து, 46,255 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 2.12% ஏற்றமாகும். இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் தொடர்ந்து கடந்த சில வர்த்தக தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையானது கிட்டதட்ட 1000 ரூபாய்க்கு பக்கமாக ஏற்றம் கண்டு இருந்தாலும், வெள்ளி விலையானது 223 ரூபாய் அதிகரித்து 43725 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. தங்கம் விலையைப் போலவே கடந்த சில தினங்களாகவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4085 ரூபாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 32,680 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வெள்ளியின் விலை கிராமுக்கு 41.31 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 41,310 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+