பட்டையை கிளப்பபோகும் தங்கம் விலை .. 2021ல் 10 கிராம் தங்கம் ரூ.65,000 தொடலாம்.. !

தங்கம் என்றாலே அது ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. அதோடு பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு புகலிடமாக இருப்பதால், முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவில் தங்கத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.

நடப்பு ஆண்டிலேயே கொரோனாவின் காரணமாக 56,200 ரூபாயாக வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில், இது 2021ல் புதிய வரலாற்று உச்சத்தினை தொடலாம். தங்கம் விலை அதிகரிக்கலாம் என பல இந்திய நிபுணர்கள் முதல் கொண்டு, சர்வதேச நிபுணர்கள், தனி நபர்கள் என பலரும் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே கணித்து வருகின்றனர்.

அதெல்லாம் சரி? 2020 முடிந்து, 2021 தொடங்கவுள்ளது, இந்த நிலையில் நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வரலாறு காணாத வீழ்ச்சி

வரலாறு காணாத வீழ்ச்சி

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய, இந்த கொரோனா வைரஸ் ஆனது, தற்போது உலகம் முழுவதும் தனது பயணத்தினை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக நிதி சந்தைகள் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியினைக் கண்டன.

நெருக்கடியான நேரத்தில் விருப்பமான தங்கம்

நெருக்கடியான நேரத்தில் விருப்பமான தங்கம்

இப்படி உலகமே நெருக்கடியான தள்ளப்பட்ட நிலையில் தான், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது, வரலாற்று உச்சத்தினை தொட்டன. இது இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் 56,200 ரூபாயினை தொட்டது. இது ஒரு வருடத்தில் சுமார் 27 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே டாலரில் அவுன்ஸூக்கு 2000 டாலர்களையும் தாண்டி 2075 டாலர்களாக அதிகரித்தது. சொல்லப்போனால் நெருக்கடியான நிலைக்கும் மத்தியிலும் ஜொலி ஜொலிக்கும் ஒரு உலோகமாக தங்கம் உயர்ந்து நின்றது.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நெருக்கடியான நிலையை சமாளிப்பதற்காகவும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், மக்களின் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் நோக்கிலும், பல மத்திய வங்கிகள் வரலாறு காணாத அளவு வட்டி குறைப்பு செய்தன. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவின் மத்திய வங்கியோ, வட்டியை பூஜ்ஜியத்துக்கும் அருகில் குறைத்தது. அதோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த வட்டி குறைப்பானது நீளும் என்றும் கூறியுள்ளது.

ஊக்கத்தொகை அறிவிப்புகள்

ஊக்கத்தொகை அறிவிப்புகள்

அதோடு மக்களின் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் பொருட்டு, புதிய ஊக்கத் தொகைகளை அறிவித்து வருகின்றன. இதுவும் ஒரு வகையில் தங்கம் விலைக்கு ஏதுவாக அமைந்தது. எனினும் இன்றளவிலும் அதிகரித்து கொரொனாவினால் மற்றொரு ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்புகள் வரலாம் என்ற உணர்வும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாகவே அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடமான தங்கம்

பாதுகாப்பு புகலிடமான தங்கம்

வரலாறு காணாத வட்டி குறைப்பினால், மற்ற முதலீட்டு திட்டங்களில் முதலீடு குறைந்துள்ளன. குறிப்பாக அபாயகரமான முதலீடுகள் தவிர்க்கப்பட்டு, சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது. ஆக இப்படி ஒரு நிலைக்கு மத்தியில், 2021ல் முதலீடு செய்ய வேண்டிய சிறப்பான திட்டம் எது என்று மதிப்பிட வேண்டிய சரியான தருணம் இது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

உலகின் தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவிலும், இந்தியாவிலும் தேவை, 2021ல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு வலுவான ஆதரவினைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கொரோன என பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாக உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் தங்கம் விலையானது அடுத்த ஆண்டில் நிச்சயம் அதிகரிக்கும். இது 2150 டாலர் மற்றும் 2390 டாலர்களை தொடும். இதே இந்திய சந்தையில் 57,000 ரூபாய் மற்றும் 63,000 ரூபாயினையும் தொடலாம் என்றும் கணித்திருந்தது. இன்று ஆங்கில தளத்தில் வெளியான கணிப்பு ஒன்று 10 கிராம் தங்கம் விலையானது 65,000 கூட தொட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+