2 நாளில் ரூ.1,700 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி ரூ.4000 வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா.. !

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

கொரோனாவின் தாக்கத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது. இது பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பங்கு சந்தைகளும் தரை தட்டின.

இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்தன. இதன் காரணமாக விலையும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டது.

தொடர் சரிவில் தங்கம் விலை

தொடர் சரிவில் தங்கம் விலை

இதற்கிடையில் தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், டாலரின் மதிப்பும் வலுவடைந்து வருகின்றது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த பத்திர சந்தையும் தற்போதும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

புராபிட் புக்கிங்கும் ஒரு காரணம்

புராபிட் புக்கிங்கும் ஒரு காரணம்

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் மீண்டும் உச்சத்தினை எட்டிய நிலையில், பொருளாதாரம் சற்று வலுவான நிலைக்கு திரும்பி வரும் நிலையில், தங்கம் விலையானது சரியலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள், சிறு வர்த்தகர்கள், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை புக் செய்திருக்கலாம்.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த இரு அமர்வின் குறைந்தபட்ச விலையும் 1677.92 டாலர்களாகும். இது முக்கிய சப்போர்ட் லெவலாகவும் பார்க்கப்படுகிறது. குறைந்த விலையை தொட்டிருந்தாலும், முடிவில் 1726.50 டாலர்களாக முடிவுற்றது. ஆக மீண்டும் தங்கம் விலையானது இதனை உடைத்தால் மட்டுமே பெரியளவில் சரியலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இரண்டு நாளில் பலத்த சரிவு

இரண்டு நாளில் பலத்த சரிவு

தங்கம் விலையானது கடந்த இரு அமர்வுகளில் தங்கம் 10 கிராமுக்கு 1,700 ரூபாய் வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. இதே வெள்ளியின் விலையானது 4,000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் முந்தைய அமர்வினை பொறுத்தவரையில் 45,815 ரூபாயினை குறைந்தபட்சமாக தொட்ட நிலையில், 45,886 ரூபாயாகவும் முடிவுற்றுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் 45,800 ரூபாயினை ஸ்டாப் லாஸ் ஆக வைத்து வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், அமெரிக்க பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு கொண்டுள்ளது. அதோடு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க, தூண்டுதல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு பிறகு டாலரின் மதிப்பானது வலுவான நிலையை எட்டியுள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

இப்போது வாங்கலாமா?

இப்போது வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது பல மாத சரிவினைத் தொட்ட நிலையில், தற்போது டாலரின் மதிப்பும் வலுவடைந்து வரும் நிலையில், வட்டி விகிதமும் குறைவாக உள்ளது, பணவீக்கத்திற்கு உந்துதலாக அமையலாம். ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம் விலையானது மேற்கொண்டு சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு உந்துதலாக இருக்கலம்

டாலரின் மதிப்பு உந்துதலாக இருக்கலம்

கடந்த ஆண்டில் அமெரிக்க டாலரின் மதிப்பானது பலவீனமான நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டது. அதேபோன்ற நிலை இந்த ஆண்டும் வரலாம். அதற்கான அறிகுறிகள் உள்ளன. இது தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம்.

தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்

தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்

கடந்த சில அமர்வுகளாவே டாலரின் மதிப்பானது வலுவடைந்து வரும் நிலையில், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் ஐரோப்பிய மத்திய வங்கிகள் இன்னும் சில ஆண்டுகளுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாது என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக இது தங்கம் விலை மீண்டு வர ஒரு முக்கிய காரணியாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே பலத்த சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 8.95 டாலர்கள் அதிகரித்து, 1735.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் கடந்த சில அமர்வுகளாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. வெள்ளியின் கேண்டில் பேட்டர்னிலும் கடந்த இரு அமர்வுகளின் குறைந்தபட்ச விலையானது 22.295 டாலர்களாக இருந்துள்ளது. அதொடு இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. தற்போது 1.43% அதிகரித்து, 23.602 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நீண்டாக நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்பட்டாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது, கிராமுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 45,998 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 465 ரூபாய் அதிகரித்து, 63,102 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவும் இல்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 7 ரூபாய் குறைந்து, 4,373 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, 34,984 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையானது தற்போது 35,000 ரூபாய்க்கு கீழாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 8 ரூபாய் குறைந்து, 4,770 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 38,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 68.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 68,200 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெள்ளி விலை சரிவினைக் கண்டு வருகின்றது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். பல காரணிகளும் தங்கம் விலைக்கு எதிராகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+