ரூ.9800க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன.. !

தங்கம் விலையானது கடந்த அமர்வு தவிர, தொடர்ந்து முந்தைய பல அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. எனினும் கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

அதிலும் தினசரி கேண்டில் பேட்டர்னில் டோஜி பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், அதன் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தினை பார்க்கும்போது, உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலையானது 9,800 ரூபாய்க்கும் மேலாக சரிவில் தான் காணப்படுகிறது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இது நல்ல வாய்ப்பு

இது நல்ல வாய்ப்பு

கடந்த சில தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், தங்கம் விலையானது நான்கு மாத சரிவில் காணப்படுகிறது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தற்போது 46,370 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இதன் அடுத்த முக்கிய லேவல் 46,600 ரூபாய் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

அமெரிக்க பெடரல் வங்கியின் இலக்கினை விட தற்போதும் பணவீக்கம் என்பது அதிகமாகவே காணப்படுகிறது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் செனட் சபையானது 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய மாபெரும் உள்கட்டமைப்பு ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இன்னும் பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் என்னவாகும்?

வட்டி விகிதம் என்னவாகும்?

தற்போது அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் டெல்டா கொரோனாவின் தாக்கம் எந்தளவுக்கு மீண்டும் இருக்கும் என்ற கவலையும் சந்தையில் இருந்து வருகின்றது. ஆக இதனை முதலீட்டாளர்கள் தீவிரமாக கண்கானித்து வருகின்றனர்.

இன்று வெளியாகவிருக்கும் டேட்டா?

இன்று வெளியாகவிருக்கும் டேட்டா?

இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்த டேட்டாவானது, சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஓவர் சோல்டு நிலையில் உள்ளன. எனினும் மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணும் விதமாக காணப்பட்டாலும், டேட்டாவினால் சந்தையின் நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா

உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா

எபபடியிருப்பினும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் தாக்கமானது, முதலீட்டாளர்களை நீண்டகால நோக்கில் வாங்கலாம். அதுவும் தங்கம் விலையானது குறைவான விலையில் உள்ள நிலையில், இது வாங்க சரியான இடமாகவும் அமையலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ள நிலையில் இன்று வெளியாகவிருக்கும் டேட்டாவினை பொறுத்து மாறுபடலாம் என்பதால் சந்தையில் இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். அதோடு சர்வதேச அளவில் உள்ள அரசியல் பதற்றங்கள், டாலரின் மதிப்பு, கொரோனா, ஃபெடரல் வங்கியின் முக்கிய அறிவிப்புகள் என பலவும் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு வருகின்றன.

தடுமாறும் தங்கம் விலை

தடுமாறும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே பலத்த சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 1753.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் வெள்ளி விலை சரிவு

மீண்டும் வெள்ளி விலை சரிவு

சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாக சரிவினைக் கண்டு வந்த வெள்ளி விலையும், இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமின்றி தற்போது .037% குறைந்து, 23.402 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

மவுனம் காக்கும் தங்கம் விலை

மவுனம் காக்கும் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 46,362 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் குறைந்த விலை எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

மீண்டும் சரிவு பாதையில் வெள்ளி

மீண்டும் சரிவு பாதையில் வெள்ளி

தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாமல் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 281 ரூபாய் குறைந்து, 62,490 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

சென்னையில் இன்றைய நிலவரம்

சென்னையில் இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 14 ரூபாய் அதிகரித்து, 4,386 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 34,984 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே 35,000 ரூபாயாக கீழாக இருந்த நிலையில், இன்று தங்கம் விலையானது 35,000 ரூபாய்க்கு மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

24 கிராம் தங்கம் விலை?

24 கிராம் தங்கம் விலை?

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் அதிகரித்து, 4,785 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 38,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குதூகலப்படுத்தும் ஆபரண வெள்ளி விலை

குதூகலப்படுத்தும் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து, 67.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 67,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெள்ளி விலை சரிவினைக் கண்டு வருகின்றது.

இன்றைய முக்கிய சப்போர்ட் லெவல்கள்

இன்றைய முக்கிய சப்போர்ட் லெவல்கள்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் - ரூ.46,060, 45,732, 45,211
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - ரூ.46,581, 46,774, 47,295

வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் - ரூ.62,435, 62,099, 61,550
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - ரூ.62,984, 63,197, 63,746

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். பல காரணிகளும் தங்கம் விலைக்கு எதிராகவே உள்ளன. அதோடு வரவிருக்கும் டேட்டாவானது எப்படியிருக்கும் என்பதை பொறுத்தே இன்று சந்தையின் போக்கும் இருக்கும் என்பதால், இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+