ரூ.10,000 மேல் சரிவிற்கு பின்னரும் தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இந்த வார தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத அளவில் பலத்த சரிவினைக் கண்டது. எனினும் இன்றோடு கடந்த மூன்று அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. எனினும் இந்த ஏற்றமும் பெரியளவில் இல்லை எனலாம்.

சொல்லப்போனால் கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது சுமார் 10 கிராமுக்கு 10,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. எனினும் தற்போது வரையிலும் கூட தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.

4 மணி நேர கேண்டில் மற்றும் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், 46,700 மேலாக சென்றால் சற்று அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஏனெனில் வார கேண்டில் மற்றும் மாத கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் தங்கம் விலையானது இன்னும் சற்று சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

10 வருடத்தில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள்.. விவசாயிகளுக்கு நன்மை.. குடிநீர் பிரச்சனை தீர்க்க வழி..! 10 வருடத்தில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள்.. விவசாயிகளுக்கு நன்மை.. குடிநீர் பிரச்சனை தீர்க்க வழி..!

கவனிக்க வேண்டிய முக்கிய காரணி

கவனிக்க வேண்டிய முக்கிய காரணி

அதோடு அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்தான டேட்டாவானது தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஆறுதல் தரும் விதமாக வந்துள்ளது. இது சந்தையில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இது பொருளாதாரம் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க செனட் சபை ஒப்புதல்’

அமெரிக்க செனட் சபை ஒப்புதல்’

அமெரிக்காவின் செனட் சபையானது 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய மாபெரும் உள்கட்டமைப்பு ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இன்னும் பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம். வேலை வாய்ப்புகளை ஊக்கப்படுத்தலாம். ஆக இதுவும் தங்கத்திற்கு எதிரான காரணியாகவே பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு அதிகரிக்கலாம்

டாலர் மதிப்பு அதிகரிக்கலாம்

மேற்கண்ட பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணி டாலர் என்பதால், இதுவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய காரணியாகவும் உள்ளது. இது மேலும் பத்திர சந்தையினையும் ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து புதிய உச்சத்தில் பங்கு சந்தைகள்

தொடர்ந்து புதிய உச்சத்தில் பங்கு சந்தைகள்

தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தை உள்பட பல நாட்டின் சந்தைகளும் தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை தொட்டு வருகின்றன. இது முதலீட்டாளர்களின் கவனத்தினை திருப்பி விடலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதனால் தங்கம் விலையானது குறைய வாய்ப்புள்ளது.

பணவீக்கத்தினையும் பாருங்க

பணவீக்கத்தினையும் பாருங்க

மேற்கண்ட பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது தற்போது வரையில் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளது. இது பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனலாம்.

உருமாற்றம் அடைந்த கொரோனா

உருமாற்றம் அடைந்த கொரோனா

எபபடியிருப்பினும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கமானது, முதலீட்டாளர்களை நீண்டகால நோக்கில் வாங்க தூண்டலாம். ஏனெனில் இது எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பொருளாதாரத்தில் என்ன செய்யபோகிறது என்ற பல கேள்விகள் எழுகின்றன. ஆக இதனையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

இன்று தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் கடந்த தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 10.20 டாலர்கள் அதிகரித்து, 1761.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இன்று வெள்ளி விலை நிலவரம் என்ன?

இன்று வெள்ளி விலை நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாக சரிவினைக் கண்டு வந்த வெள்ளி விலையும், இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. தற்போது 1.11% அதிகரித்து, 23.372 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது கிராமுக்கு 206 ரூபாய் அதிகரித்து, 46,567 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமே.

இன்றைய வெள்ளி விலை

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 540 ரூபாய் அதிகரித்து, 62,400 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக இது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 9 ரூபாய் அதிகரித்து, 4,395 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 35,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கிராம் தங்கம் விலை

24 கிராம் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 10 ரூபாய் அதிகரித்து, 4,795 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 38,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து குறையும் ஆபரண வெள்ளி

தொடர்ந்து குறையும் ஆபரண வெள்ளி

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, 67.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 67,300 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெள்ளி விலை சரிவினைக் கண்டு வருகின்றது. இது வெள்ளி வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இன்றைய முக்கிய சப்போர்ட் லெவல்கள்

இன்றைய முக்கிய சப்போர்ட் லெவல்கள்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் - ரூ.46,149, 45,935, 45,505
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - ரூ.46,579, 46,795, 47,225

வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் - ரூ.61,369, 60,878, 59,730
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - ரூ.62,517, ,63,174, 64,332

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். பல காரணிகளும் தங்கம் விலைக்கு எதிராகவே உள்ளன. அதோடு இன்று வார இறுதியாதலால், திங்கட்கிழமையன்று சந்தை தொடக்கத்தினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். ஆக இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on august 13th, 2021; gold prices struggle after heavy fall

Gold prices struggling after heavy fall in world market, silver prices also starting to rise today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X