ரூ.9000 சரிவில் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன.. இது வாங்க சரியான நேரமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினைக் காணத் தொடங்கியுள்ளது.

எப்படியிருப்பினும் இன்று விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. என்ன காரணம்..! பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. என்ன காரணம்..!

கொரோனாவின் தாக்கத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் தற்போது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தோடு ஒப்பிடும்போது 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.

உச்சத்தில் இருந்து சரிவு

உச்சத்தில் இருந்து சரிவு

தங்கம் விலையானது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராமுக்கு 9000 சரிவில் காணப்படுவது, நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்த நேரத்தில் நீண்டகால நோக்கில் வாங்கலாமா? இது சரியான வாய்ப்பா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம் என பல கேள்விகள் எழுந்துள்ளன.

முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்

முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கத்தின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1,815 டாலர்களாகும். இதனை உடைத்தால் சந்தையில் இன்னும் ஏற்றம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது 1789 டாலர்கள் என்ற நிலையில் சற்று குறைந்து காணப்படுகிறது. இது வார மற்றும் தினசரி கேண்டில்களில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் விலையை போல வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவலும் 23.90 டாலர்களாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக இதனை உடைத்துக் காண்பித்தால், இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இது தற்போது 23.867 டாலர் என்ற நிலையில் காணப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடத்திற்கு சப்போர்ட்

பாதுகாப்பு புகலிடத்திற்கு சப்போர்ட்

தங்கம் விலையானது அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாற்றம் அடைந்துள்ள டெல்டா கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதோடு சில நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

தங்க வர்த்தகர்கள் தற்போது அமெரிக்க ஃபெடரல் வங்கியானது உள்கட்டமைப்பு குறித்தான மிகப்பெரிய ஊக்கத்தொகையினை பற்றி அறிவித்துள்ள நிலையில், அது குறித்த முக்கிய அறிவிப்புகள் ஏதும் வருமா? என்ற நிலையே இருந்து வருகின்றது. இது சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பதால், முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

டாலர் மதிப்பு நிலவரம் என்ன?

டாலர் மதிப்பு நிலவரம் என்ன?

தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், டாலரின் மதிப்பும் வலுவடைந்து வருகின்றது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த பத்திர சந்தையும் தற்போதும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. எனினும் கொரோனாவின் தாக்கத்தினால் இது பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கம் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

சப்போர்ட்
முக்கிய சப்போர்ட்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த இரு அமர்வின் குறைந்தபட்ச விலையும் - ரூ.46,934, 46,643, 46,179
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.47,398, 47,571, 48,035

வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.63,842,64,227,65,303
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.62,766, 62,075, 60,999

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றத்தினை கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 3.65 டாலர்கள் அதிகரித்து, 1793.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் கடந்த சில அமர்வுகளாக ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. தற்போது 0.56% அதிகரித்து, 23.925 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது, கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து, 47,370 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்ப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 353 ரூபாய் அதிகரித்து, 63,816 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது மாற்றமில்லாமல் 4,478 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,584 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையானது தற்போது 35,000 ரூபாய்க்கு மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 4,853 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,824 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 68.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 68,600 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெள்ளி விலை ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையிலேயே இருந்து வருகின்றது. மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. பல காரணிகளும் தங்கம் விலைக்கு எதிராகவே இருந்தாலும், கொரோனாவின் தாக்கம் என்பது நீண்டகால நோக்கில் வாங்குபவர்களுக்கு சாதகமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on august 17th, 2021; gold prices down Rs.9,000 in last year high

Gold and silver prices rising in MCX and comex market, silver also up in both markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X