சற்றே குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்றே சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவில் காணப்படுகின்றது.

இந்த சரிவு இனியும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

இன்று வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

முதல் நாளே சரிவில் பங்கு சந்தைகள்.. கவனிக்க வேண்டிய ஆட்டோமொபைல், ரியால்டி பங்குகள்..! முதல் நாளே சரிவில் பங்கு சந்தைகள்.. கவனிக்க வேண்டிய ஆட்டோமொபைல், ரியால்டி பங்குகள்..!

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 500 ரூபாய்க்கு மேலாக ஏற்றம் கண்டு முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் இன்று சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தொடர்ந்து தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 1800 டாலர்களுக்கும் கீழாகவே காணப்படுகின்றது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

சர்வதேச அளவில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கையானது விரைவில் முழுமையாக நிறுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வட்டி விகிதம் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.

வேலையின்மை விகிதம் சரிவு

வேலையின்மை விகிதம் சரிவு

அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறித்தான தரவானது 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை மற்றும் வட்டி விகித அதிகரிப்புக்கு தூண்டலாம். இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 2.30 டாலர் குறைந்து, 1,781.65 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மேலும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் தற்போது சற்று குறைந்திருப்பதால், மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று குறைந்து, அவுன்ஸூக்கு, 22.473 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து, 47,879 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 42 ரூபாய் அதிகரித்து, 61,558 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,516 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,606 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளார்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,508 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 36,064 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,918 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 39,344 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,180 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இதுவரையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 65.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 656 ரூபாயாகவும், கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 65,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினையும் தேவை இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on December 06th 2021: Gold prices today struggle after big jump, Will it fall further, what experts predict?

Gold prices on December 06th 2021: Gold prices today struggle after big jump, Will it fall further, what experts predict?/ சற்றே குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு..?
Story first published: Monday, December 6, 2021, 11:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X