மாதத்தின் முதல் நாளே வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஆனால் அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், ஓமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக, இந்தியாவில் மீண்டும் மூன்றாம் அலை வந்து விடுமோ? இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் வந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சத்தின் மத்தியில், மக்கள் அத்தியாவசியம் அல்லாத செலவுகளை தள்ளி வைத்துள்ளனர் எனலாம்.

இதற்கிடையில் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது தொடர்ந்து காலை அமர்வில் பலமான ஏற்றத்தினை கண்டாலும், மீண்டும் மாலை அமர்வில் சரிவிலேயே முடிவடைந்து வருகின்றது. இன்றும் அதே போலத் தான் சந்தையில் காணப்படுகின்றது.

விலை குறைவான பொருட்களை அதிகம் வாங்கும் இந்திய மக்கள்.. ஏன் தெரியுமா..!விலை குறைவான பொருட்களை அதிகம் வாங்கும் இந்திய மக்கள்.. ஏன் தெரியுமா..!

பத்திரம் வாங்குதல் குறைப்பு

பத்திரம் வாங்குதல் குறைப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், தொடர்ந்து பணவீக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுக்குள் வைக்க, அமெரிக்காவின் பத்திரம் வாங்குதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாமென கூறியுள்ளார். இது அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

தொடர்ந்து பல நாடுகளில் மீண்டும் தனது ஆதீக்கத்தினை நிலை நிறுத்தி வரும் கொரோனாவின் தாக்கத்தினால், உலக நாடுகளின் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் மீண்டும் பங்கு சந்தைகள் சரிய ஆரம்பித்துள்ளன. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவு பெருகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவலில் தங்கம்

முக்கிய லெவலில் தங்கம்

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டாலும், முடிவு விலையானது 1800 டாலர்களுக்கும் கீழாகவே இருந்து வருகின்றது. இன்றைய தொடக்க விலையும் 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது. ஆக தங்கம் விலையானது இன்னும் சற்று குறையலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 5.75 டாலர் அதிகரித்து, 1,782.25 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று அதிகரித்து, அவுன்ஸூக்கு, 22.920 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று குறைந்தே (பிப்ரவரி கான்ட்ராக்ட்) காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 73 ரூபாய் குறைந்து, 47,750 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையானது தற்போது கிலோவுக்கு 51 ரூபாய் அதிகரித்து, 62,338 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 62,287 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 62,325 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, 4,488 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 35,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 4896 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 39,168 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. கிராமுக்கு 20 பைசா குறைந்து, 66.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளியை மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதனால் தேவையிருக்கும்பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on December 1st 2021: Gold prices fell on the first day of the month

Gold prices on December 1st 2021: Gold prices fell on the first day of the month/ மாதத்தின் முதல் நாளே வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.
Story first published: Wednesday, December 1, 2021, 11:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X