சாமானியர்களுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்.. 3வது நாளாக குறையும் தங்கம் விலை.. இனியும் குறையுமா?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கம் விலையானது சரிவில் காணப்பட்டது. இன்று இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, இன்று சர்வதேச சந்தையும் சரிவில் காணப்படுகின்றது. இந்திய சந்தையும் சரிவில் காணப்படுகின்றது.

தங்கத்திற்கான தேவையானது ஓமிக்ரான் அச்சத்தின் காரணமாக மீண்டும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு வேளை இரண்டாவது அலை போல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் என்ன செய்வது? என்ற நிலைக்கு மத்தியில் அத்தியாவசியம் அல்லாத பொருட்களை வாங்குவதில் நாட்டம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது.

உச்சத்தில் இருந்து ரூ.8000 சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.8000 சரிவு

அதிலும் குறிப்பாக கடந்த சில அமர்வுகளாகவே காலை அமர்வில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், மாலை அமர்வில் மீண்டும் சரிவில் காணப்படுகின்றது. ஒரு புறம் ஓமிக்ரான் அச்சம் நிலவி வந்தாலும், மறுபுறம் கடந்த ஆண்டு தொட்ட வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 8,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.

பத்திரம் வாங்குதல் குறைப்பு

பத்திரம் வாங்குதல் குறைப்பு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது டாலர் மதிப்பு பற்றிய கவலைக்கு மத்தியில், சற்றே சரிவில் காணப்படுகின்றது. எனினும் பணவீக்க அச்சத்தின் மத்தியில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் விரைவில் பத்திரம் வாங்குதலை குறைக்க நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வட்டி அதிகரிப்படலாம்

முன்னதாக வட்டி அதிகரிப்படலாம்

பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கைக்கு மத்தியில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி அதிகரிப்பு நடவடிக்கையையும் விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பத்திர சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

$1800ல் தடுமாற்றம்

$1800ல் தடுமாற்றம்

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச சந்தையில் 1800 டாலர்களுக்கு கீழேயே இருந்து வருகின்றது. ஆக இன்றைய தொடக்க விலையும் 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது. ஆக தங்கம் விலையானது இன்னும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 6.25 டாலர்கள் குறைந்து, 1,778.10 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று அதிகரித்து, அவுன்ஸூக்கு, 22.343 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, பிப்ரவரி கான்ட்ராக்டில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 179 ரூபாய் குறைந்து, 47,695 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. வெள்ளி விலையானது தற்போது கிலோவுக்கு 232 ரூபாய் குறைந்து, 61,075 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,307 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,380 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4,486 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 35,888 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4894 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 39,152 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,940 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. கிராமுக்கு 66.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், கிலோவுக்கு 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+