உச்சத்திலிருந்து ரூ.8,700 சரிவில் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து குறைவாக இருந்து வந்த நிலையில், இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது ஒரு மாத குறைந்த விலையில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,700 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகின்றது.

தங்கம் விலையானது தற்போது ஏற்றம் கண்டிருந்தாலும், தற்போது வரையிலும் கூட, 1800 டாலர்களுக்கும் கீழாகவே இருந்து வருகின்றது.

பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை

பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை

தங்கம் விலையானது ஒரு மாத சரிவில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது பத்திரம் வாங்குதலை விரைவில் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் இந்த முடிவினை அரசு எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வட்டி கடுமையாக்கப்படலாம்

விரைவில் வட்டி கடுமையாக்கப்படலாம்

இதற்கிடையில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்திலும் விரைவில் மாற்றம் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதனால் டாலரின் மதிப்பானது மேற்கொண்டு வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகடலிமான தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அழுத்தத்தில் காணப்பட்டது.

இந்த நிலை இப்படியே தொடரலாம்

இந்த நிலை இப்படியே தொடரலாம்

தங்கம் விலையானது சமீபத்திய நாட்களாகவே அவுன்ஸூக்கு 1770 - 1780 டாலர்களுக்கு இடையே காணப்படுகின்றது. இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பரவி வரும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில் அதிக சரிவினைக் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டியில்லா முதலீட்டில் குறையலாம்

வட்டியில்லா முதலீட்டில் குறையலாம்

வட்டி விகிதம் அதிகரிப்பு பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அரசின் வருவாயினை கூட்டலாம். இதற்கிடையில் பத்திர சந்தையானது ஏற்றம் காணலாம். இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் தேவையும் ஓமிக்ரான் அச்சம் காரணமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 12.85 டாலர் அதிகரித்து, 1,775.75 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது கிட்டதட்ட 1% அதிகரித்து, அவுன்ஸூக்கு, 22.505 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் மீடியர் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 47,625 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 281 ரூபாய் அதிகரித்து, 61,404 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,123 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,164 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 4,473 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 35,78 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4880 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 39,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 65.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 653 ரூபாயாகவும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 65,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரித்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும்பட்சத்தில் வாங்கலாம்..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+