ஏமாற்றம்.. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்.. இன்று எவ்வளவு அதிகரித்திருக்கிறது தெரியுமா?

டெல்லி: தங்கம் விலையானது (gold) தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது வரவிருக்கும் பணவீக்கம் குறித்தான தரவு குறித்து முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம். இதற்கிடையில் தங்கள் முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர்.

இது தங்கம் விலையில் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தாமல் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இன்று வெளியாகும் இந்த தரவானது இனியும் வட்டி இருக்குமா? என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்


இதற்கிடையில் தான் தற்போது வரையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் தொடர்ந்து தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1700 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. இது மேற்கோண்டு ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பணவீக்கத் தரவானது எப்படி வருமோ என்ற அச்சமும் இருந்து வருகிறது.

மேற்கோண்டு அதிகரிக்குமா?

மேற்கோண்டு அதிகரிக்குமா?

அமெரிக்க டாலரின் மதிப்பும் பெரியளவில் மாற்றமின்றி சற்றே அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. ஆக இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை பணவீக்கம் குறைந்தால் அது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை குறைக்க வழிவகுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. பல ஆய்வாளர்களும் டிசம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதம் மீண்டும் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 3.10 டாலர்கள் குறைந்து, 1710.60 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையையும், அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வெளியாகவிருக்கும் தரவினை பொறுத்து நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போலவே குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்றைய தொடக்க விலையும் கீழாக காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.54% குறைந்து, 21.207 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 126 ரூபாய் அதிகரித்து, 51,632 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்சம், அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதனால் மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் எனலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு, 136 ரூபாய் குறைந்து, 61,410 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்சம், அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதனால் மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் எனலாம்.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4820 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 38,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 5258 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 42,064 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 52,580 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று பலத்த சரிவினைக் கண்டு காணப்படுகிறது. இது கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 61.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 614 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 6000 ரூபாய் குறைந்து, 61,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.48,200

மும்பை - ரூ.47,360

டெல்லி - ரூ.47,460

பெங்களூர் - ரூ.47,410

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.48,200

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+