தங்கம் விலையானது தற்போது பெரிய அளவில் மாற்றம் காணாவிட்டாலும், கடந்த அமர்வில் பலத்தை ஏற்றுக் கண்டது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.
இது கடந்த அமர்வில் வெளியான அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடு குறித்தான டேட்டாவானது, சந்தைக்கு பாதகமாக வந்த நிலையில் இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது.
சிறந்த ஹெட்ஜிங்
மேலும் இது அதிகரித்துள்ள நுகர்வோர் விலை குறியீட்டுக்கு மத்தியில், தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி விகிதமானது மேற்கொண்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன, தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கலாம்
தொடர்ந்து வலுவாக இருந்து வரும் டாலரின் மதிப்பானது தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், இது மேற்கொண்டு பணவீக்கத்திற்கும் வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
மத்திய வங்கியின் நிலைப்பாடு
அதிகரித்துள்ள இந்த பணவீக்க விகிதமானது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்ற நிலையில், தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்தன. இதன் காரணமாக தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினைக் கண்டது. மீடியம் டெர்மில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதத்திலும் தற்போது மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் மத்திய வங்கியின் கணிப்புகளை விட பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. ஆக மத்திய வங்கியின் நிலைப்பாடு விரைவில் எதிராக மாறலாம். அப்போது தங்கம் விலையில் ஒரு சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை சரியலாம்
மேலும் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விரைவில் தங்கத்தில் மிகப்பெரிய அளவில் ஒரு சரிவு இருக்கலாம் என்று நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் தொடர்ந்து தங்கம் விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், புராபிட் புக்கிங் செய்யப்படலாம். இதனால் தங்கம் விலை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 6.75 டாலர்கள் அதிகரித்து, 1855.20 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தொடங்கியுள்ளது.
காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 24.953 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 266 ரூபாய் அதிகரித்து, 49,120 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 48,854 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 48,941 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 564 ரூபாய் அதிகரித்து, 66,442 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 65,878 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 65,854 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து, 4,620 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 36,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 82 ரூபாய் அதிகரித்து, 5,040 ரூபாயாகவும், சவரனுக்கு 656 ரூபாய் அதிகரித்து, 40,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 50,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. கிராமுக்கு 1.30 பைசா அதிகரித்து, 70.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 706 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,300 ரூபாய் அதிகரித்து, 70,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில் வாங்கி வைக்கலாம். எனினும் புதியதாக காமாடிட்டி சந்தையில் வாங்கி வைக்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications