5 மாத உச்சத்தினை தொட்ட பிறகு இன்று தங்கம் விலை சரிவு.. இது வாங்க சரியான இடமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது தற்போது பெரிய அளவில் மாற்றம் காணாவிட்டாலும், கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

எனினும் இது நீண்டகால நோக்கில் இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

வரப்போகும் விலைவாசி உயர்வு.. நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பு..!வரப்போகும் விலைவாசி உயர்வு.. நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பு..!

இது கடந்த அமர்வில் வெளியான அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடானது அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலமான ஏற்றத்தினை கண்டு வந்தது.

தங்கம் Vs ஹெட்ஜிங்

தங்கம் Vs ஹெட்ஜிங்

அமெரிக்காவில் அதிகரித்துள்ள நுகர்வோர் விலை குறியீடானது, பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன, தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

நுகர்வோர் விலை குறியீட்டுக்கு மத்தியில் டாலரின் மதிப்பானது வலுவான நிலையில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். மேலும் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள உச்சமானது மேற்கொண்டு தங்கத்தில் அழுத்ததினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை
 

தங்கத்தின் தேவை

தொடர்ந்து தங்கத்தின் தேவையானது பிசிகல் ஆகவும், முதலீட்டு ரீதியாகவும் அதிகரித்து வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விரைவில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையில், இதுவும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Array

Array

சர்வதேச சந்தை

தங்கத்தின் சப்போர்ட் லெவல் - $1850 - 1832
ரெசிஸ்டன்ஸ் லெவல் - $1878 - 1892
வெள்ளியின் சப்போர்ட் லெவல் - $25 - 24.80
ரெசிஸ்டன்ஸ் லெவல் - $25.55 - 25.88

இந்திய சந்தை
தங்கத்தின் சப்போர்ட் லெவல் - ரூ.49,000 - 47,770
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.49,440 - 49,700

வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.66,500 - 66,100
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.67,400 - 68,100

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 4.80 டாலர்கள் குறைந்து, 1859.05 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 25.253 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது தற்போது குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 52 ரூபாய் குறைந்து, 49,165 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 49,216 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,104 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது தற்போது குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 153 ரூபாய் அதிகரித்து, 67,118 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 66,965 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 66,800 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 4,626 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 37,008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5,046 ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 40,368 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 50,460 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 71.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 714 ரூபாயாகவும், கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 71,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில் வாங்கி வைக்கலாம். எனினும் புதியதாக வாங்கி வைக்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 12th 2021: gold prices down after hit five month high

Gold price latest updates.. Gold prices on November 12th 2021: gold prices down after hit five month high / 5 மாத உச்சத்தினை தொட்ட பிறகு இன்று தங்கம் விலை சரிவு.. இது வாங்க சரியான இடமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X