எகிறி அடிக்கும் தங்கம் விலை.. விரைவில் ரூ.50,000 தொடலாம்.. இன்றைய நிலவரம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக தங்கம் என்றாலே நம்மவர்களுக்கு அலாதி பிரியம். இது மக்களின் வாழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துள்ள ஒரு உலோகமாக உள்ளது. இப்படி மக்களின் வாழ்வுடன் இணைந்துள்ள தங்கம், தற்போதைய காலக்கட்டங்களில் முதலீட்டிலும் முக்கிய அம்சம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது.

 

இத்தகைய நிலையில் கடந்த அமர்வில் தங்கம் விலையானது, ஆச்சரியத்தை கொடுக்கும் விதமாக பலத்த சரிவினைக் கண்டது. இது இன்றும் சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இன்றி காணப்படுகின்றது.

 கிரிப்டோகரன்சி தடை செய்ய வேண்டாம், ஆனா.. முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு..! கிரிப்டோகரன்சி தடை செய்ய வேண்டாம், ஆனா.. முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு..!

தங்கம் விலையானது தற்போது அதிகரித்திருந்தாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

குறிப்பாக சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சாதக, பாதகமான காரணிகள் என்னென்ன? முக்கிய லெவல்கள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

சர்வதேச சந்தையில் பல காரணிகளுக்கும் மத்தியில் பணவீக்க விகிதமானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது, தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வந்தது. எனினும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்த தங்கம் விலை, கடந்த அமர்வில் பலத்த சரிவை கண்டது. இது புராபிட் புக்கிங் செய்யலாம் என்ற நிலையில் சரிவினைக் கண்டுள்ளது.

டாலர் மதிப்பு ஏற்றம்
 

டாலர் மதிப்பு ஏற்றம்

பத்திர சந்தையானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் வலுவடைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது கடந்த அமர்வில் சற்று சரிவினைக் கண்டது. இன்றும் இதுவரையில் சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

மீடியம் டெர்மில் விலை குறையலாம்

மீடியம் டெர்மில் விலை குறையலாம்

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது ஓவர் பாட் லெவலில் உள்ளது. இதனால் மீடியம் டெர்ம் மற்றும் இன்ட்ரா டே முதலீட்டாளர்கள் தங்கத்தில் தங்களது லாபத்தினை புக் செய்யும் விதமாக புராபிட் புக்கிங் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்னும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய கமாடிட்டி சந்தை

இந்திய கமாடிட்டி சந்தை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் பொருத்தவரையில் 10 கிராமுக்கு விரைவில் 50,000 ஆயிரம் ரூபாயை தொடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது இன்னும் தங்கம் விலையானது டெக்னிக்கலாக ஆர் எஸ் ஐ குறியீட்டில் சற்று மீடியம் டெர்மில் குறைவது போல் இருப்பதால், குறைந்த பின்னர் வாங்கி வைக்கலாம்.

புதிய ஆர்டர்கள் சரிவு

புதிய ஆர்டர்கள் சரிவு

கமாடிட்டி சந்தையில் தற்போது புதிதாக வாங்கும் ஆர்டர்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது. இது தங்கம் விலையானது உச்சத்தில் இருப்பதால் முதலீடு செய்யாமல் இருக்கலாம் என்ற நிலையும் இருந்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு என பல காரணிகளும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1,867.35 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று அதிகரித்து, அவுன்ஸூக்கு, 25.122 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடம் எனலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து, 49,360 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 174 ரூபாய் அதிகரித்து, 66,737 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 66,563 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 66,800 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 4,650 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 37,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, 5,073 ரூபாயாகவும், சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 40,584 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 50,730 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 71.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 715 ரூபாயாகவும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 71,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 16th 2021: Gold prices will soon touch Rs.50,000 per 10 gram

Gold prices on November 16th 2021: Gold prices will soon touch Rs.50,000 per 10 gram/ எகிறி அடிக்கும் தங்கம் விலை.. விரைவில் ரூ.50,000 தொடலாம்.. இன்றைய நிலவரம் என்ன.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X