தங்கம் விலை சற்று சரிவைக் காணலாம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு.. இன்று என்ன நிலவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது தற்போது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்றத்தில் காணப்பட்டாலும், இது சரியலாம் என கூறியிருப்பது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் மற்றும் தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய அமர்வுகளில் தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையில் விலை உச்சத்தில் இருந்து வருவதால், டிரேடர்கள் புதிய ஆர்டர்களை செய்ய தயங்கி வருகின்றனர்.

குறிப்பாக மீடியம் டெர்ம் டிரேடர்கள் சரியான நேரத்திற்காக முதலீடு செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.

எகிறி அடிக்கும் தங்கம் விலை.. விரைவில் ரூ.50,000 தொடலாம்.. இன்றைய நிலவரம் என்ன..! எகிறி அடிக்கும் தங்கம் விலை.. விரைவில் ரூ.50,000 தொடலாம்.. இன்றைய நிலவரம் என்ன..!

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

அமெரிக்காவில் தற்போது எண்ணெய் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் விலையானது ஏழு வருடங்களில் இல்லாத அளவு உச்சத்தினை கண்டுள்ளது. இதற்கிடையில் இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

டாலர் மற்றும் பத்திர சந்தை

டாலர் மற்றும் பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது மீண்டும் தொடர்ந்து தற்போது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பும் வலுவடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் பணவீக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், நீண்டகால நோக்கில் தங்கம் விலை இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

அமெரிக்கா சீனா பேச்சு வார்த்தை

அமெரிக்கா சீனா பேச்சு வார்த்தை

கடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீனா அதிபர் ஜி ஜின்பிங்கும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கிட்டதட்ட 4 மணி நேரம் உரையாற்றினர். இதில் இரு நாடுகளின் வர்த்தகம் குறித்தான பேச்சு வார்த்தை, தென் சீனக் கடல், பருவ நிலை மாற்றம், சீனாவின் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பலவற்றை பற்றிய பேச்சு வார்த்தை நடந்தது.

பொருளாதாரத்திற்கு சாதகம்

பொருளாதாரத்திற்கு சாதகம்

ஆக இது எதிர்காலத்தில் இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் சாதகமான அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வந்த வர்த்தக பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது இவ்விரு நாடுகளுக்கு மட்டும் அல்ல, சர்வதேச நாடுகளுக்கும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சில்லறை விற்பனை அதிகரிப்பு

சில்லறை விற்பனை அதிகரிப்பு

அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான தரவானது, கடந்த அக்டோபர் மாதத்தில் 1.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளையும் மீறி இது 1.7% ஆக அதிகரித்தது. ஆக இது விரைவில் அமெரிக்காவின் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என்ற கவலையும் இருந்து வருகின்றது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

தங்கத்தின் விலையானது 1868 டாலர்களுக்கும் மேலாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தால், இது மேற்கொண்டு 1906 டாலர்களை தொடலாம். இதே சரிவினைக் காணும்பட்சத்தில் 1828 டாலர்களை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 2.05 டாலர்கள் அதிகரித்து, 1856.15 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 25.032 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது தற்போது அதிகரித்து இருந்தாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக உள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து, 49,084 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 49,038 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,068 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 188 ரூபாய் அதிகரித்து, 66,422 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 66,234 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 66,329 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,625 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 37,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, 5,045 ரூபாயாகவும், சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து, 40,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 50,450 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. கிராமுக்கு 50 பைசா குறைந்து, 71 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 710 ரூபாயாகவும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 71,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதியதாக வாங்கி வைக்க நினைப்பவர்கள், சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 17th 2021: gold prices may down further today

Gold prices on November 17th 2021: gold prices may down further today/ தங்கம் விலை சற்று சரிவைக் காணலாம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு.. இன்று என்ன நிலவரம்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X