தங்கம் விலையானது தற்போது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையானது இது சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் 9 மாத உச்சத்தினை தொட்டுள்ளது.
இது 9 மாத உச்சமான 49,600 ரூபாயினை தொட்ட நிலையில், அந்த லெவலில் தொடர்ந்து வர்த்தகமாகவில்லை. இது தற்போது 49,000 ரூபாய் என்ற அளவில் காணப்படுகின்றது.
டாலர் Vs தங்கம்
அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பானது ஏற்றம் கண்டு வருகின்றது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது சரிவில் காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வில் காலை நேர அமர்வில் தங்கம் விலையானது சரிவில் காணப்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் ஏற்றத்தினை கண்டது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் முக்கிய லெவல்
அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான டேட்டா வெளியான நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது பல மாத உச்சத்தினை தொட்டது. எப்படியிருப்பினும் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 1850 மற்றும் 1840 டாலர்களாக உள்ளது. இதே ஏற்றம் கண்டால் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 1870 மற்றும் 1873 டாலர்களாகும்.
பணவீக்கம் Vs தங்கம்
கடந்த அமர்வில் டாலரின் மதிப்பானது சாதகமான டேட்டாவுக்கு மத்தியில் 16 மாத உச்சத்தினை தொட்டது. இது டாலரின் தங்கத்தினை வங்குபவர்களுக்கு விலை அதிகமானதாகவும் இருக்கும். இது மேற்கொண்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது காலையில் சரிவில் காணப்பட்டாலும், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டது..
புராபிட் புக்கிங் செய்யலாம்
எப்படி இருப்பினும் வலுவான டாலரின் மதிப்பானது தங்கத்தின் அதிக விலையேற்றத்தினை தடுத்துள்ளதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் தங்கம் விலையானது பல மாத உச்சத்தில் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
சந்தையில் அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளின் முக்கிய நடவடிக்கை, அமெரிக்க சீனா இடையேயான பிரச்சனை, அரசியல் பதற்றங்கள், கொரோனா பரவல், புராபிட் புக்கிங் என பலவும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக உள்ளன. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 2.45 டாலர்கள் குறைந்து, 1867.75 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 25.062 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக உள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 102 ரூபாய் குறைந்து, 49,190 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 49,292 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,199 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 324 ரூபாய் குறைந்து, 66,301 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 66,625 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 66,401 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 4,634 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 37,072 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 5,055 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 40,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 50,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 71.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 714 ரூபாயாகவும், கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 71,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறைந்த பின்னர் வாங்கலாம். குறிப்பாக புதியதாக வாங்கி வைக்க நினைப்பவர்கள், சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

தங்கம் விலை தடாலடியாக ரூ.6000 உயர்வு.. MCX சந்தையில் நடப்பது என்ன..?

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications