சாமானியர்களுக்கு மீண்டும் நல்ல வாய்ப்பை கொடுத்த தங்கம்.. எவ்வளவு குறைஞ்சிருக்கு..?

தங்கம் விலையானது இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்று இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

குறிப்பாக இந்திய சந்தையில் கடந்த வாரத்தில் 9 மாத உச்சமான 49,600 ரூபாயினை தொட்டது. எனினும் அந்த விலையில் இருந்து பெரியளவில் குறையவும் இல்லை. எனினும் தற்போது இது தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.

ஏற்றத்தில் பத்திர சந்தை

ஏற்றத்தில் பத்திர சந்தை

குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், தங்கத்தின் அதிக விலையேற்றத்தினை தடுத்து வருகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 1850 டாலர் உள்ளது. தற்போது வரையில் தங்கம் விலை இதற்கு மேலேயே இருந்து வருகின்றது. இது தொடர்ந்து 1870 டாலர்களை உடைக்க முயற்சித்தும் வருகின்றது. எனினும் தொடர்ந்து 1870 - 1850 டாலர்களுக்கு உள்ளேயே இருந்து வருகின்றது.

முக்கிய கவலைகள்

முக்கிய கவலைகள்

சந்தையில் தற்போது பணவீக்கம் அதிகரிக்கலாமோ என்ற கவலை இருந்து வரும் நிலையில், கொரோனா தாக்கம், பொருளாதார வளர்ச்சி விகிதம், வட்டி விகிதத்தில் மாற்றம், டாலர் மதிப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது தங்கத்தின் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

புராபிட் புக்கிங் செய்யலாம்

புராபிட் புக்கிங் செய்யலாம்

எப்படி இருப்பினும் வலுவான டாலரின் மதிப்பானது தங்கத்தின் அதிக விலையேற்றத்தினை தடுத்துள்ளதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் தங்கம் விலையானது பல மாத உச்சத்தில் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்து வருவதாலும் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 2.45 டாலர்கள் அதிகரித்து, 1863.85 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.837 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக உள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் இன்று காலை அமர்வில் விடுமுறை என்றாலும், மாலை அமர்வு உண்டு. தற்போது தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 149 ரூபாய் அதிகரித்து, 49,208 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 49,059 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,116 ரூபாயாக தொடங்கியுள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 93 ரூபாய் குறைந்து, 65,877 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 65,970 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 65,895 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4,629 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 37,032 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5,050 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 40,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 50,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. கிராமுக்கு 70 பைசா குறைந்து, 70.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 707 ரூபாயாகவும், கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 70,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறைந்த பின்னர் வாங்கலாம். அதிலும் இன்று வார இறுதியாதலால் திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+