சாமானியர்களுக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பு.. தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைஞ்சிருக்கு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்று பெரிய அளவில் சரிவினைக் காணாவிட்டாலும் சிறிதளவே சரிவினைக் கண்டுள்ளது. இது தங்க ஆர்வலர்கள் மற்றும் டிரேடர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

எனினும் இன்று இது இன்னும் சரியுமா? அடுத்து எப்படியிருக்கும்? வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். முக்கிய லெவல்கள் என்னென்ன?

சமீபத்திய நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்று இதுவரையில் பெரியளவில் மாற்றமின்றி சரிவில் காணப்படுகின்றது.

9 மாத உச்சத்திலிருந்து வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இனியும் சரியுமா.. இனி எப்படியிருக்கும்? 9 மாத உச்சத்திலிருந்து வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இனியும் சரியுமா.. இனி எப்படியிருக்கும்?

2 வார சரிவில் தங்கம் விலை

2 வார சரிவில் தங்கம் விலை

குறிப்பாக இந்திய சந்தையில் கடந்த வாரத்தில் 9 மாத உச்சமான 49,600 ரூபாயினை தொட்டது. எனினும் அந்த விலையில் இருந்து தற்போது சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது டெக்னிக்கலாகவும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது. இதற்கிடையில் 2 வார சரிவில் காணப்படும் தங்கம் விலையானது, இனி எப்படியிருக்கும்? இன்று என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் மதிப்பு சரிவு

டாலர் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்சத்தில் காணப்பட்ட நிலையில், இது தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது. எனினும் இன்று மீண்டும் டாலரின் மதிப்பானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றமில்லை. இது இனியும் பெரியளவில் சரிவினைக் காணுமா? என்பது கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது.

வட்டியில் மாற்றம் செய்யலாம்
 

வட்டியில் மாற்றம் செய்யலாம்

ஃபெடரல் ரிசர்வ் வங்கியாளர்கள் பத்திரம் வாங்குதல் நடவடிக்கையினை நடப்பு மாதம் தொடங்கியுள்ள நிலையில், இனி வரும் மாதங்களில் இது தொடரலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவில் பணவீக்கம் பற்றிய அச்சமும் நிலவி வருகின்றன. இதற்கிடையில் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தில் முக்கிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

கடந்த தீபாவளி பருவத்தில் தங்கத்தின் தேவையானது எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. இது விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது. எனினும் வரவிருக்கும் திருமண பருவத்தில் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 2.15 டாலர்கள் குறைந்து, 1849.40 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்றும் அதே தொடக்க விலையில் தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 24.773 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக உள்ளது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தற்போது தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, 48,849 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 48,828 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 48,794 ரூபாயாக தொடங்கியுள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 82 ரூபாய் அதிகரித்து, 65,638 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 65,556 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 65,458 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 4,605 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 36,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 5,024 ரூபாயாகவும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 40,192 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 50,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. கிராமுக்கு, 70.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 704 ரூபாயாகவும், கிலோவுக்கு, 70,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறைந்த பின்னர் வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 22th 2021: gold jewellery prices fall fourth day in a row

Gold prices on November 22th 2021: gold jewellery prices fall fourth day in a row/ சாமானியர்களுக்கு மீண்டும் சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைஞ்சிருக்கு..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X