6-வது நாளாக வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் என்றாலே நம்மவர்களுக்கு அலாதி பிரியம். இது மக்களின் வாழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துள்ள ஒரு மஞ்சள் உலோகமாகும்.

தற்போதைய காலக்கட்டங்களில் முதலீட்டிலும் முக்கிய அம்சம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது.

காளையா, கரடியா போராட்டத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 58,900 அருகில் வர்த்தகம்..! காளையா, கரடியா போராட்டத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 58,900 அருகில் வர்த்தகம்..!

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது இன்னும் சரியுமா? அடுத்த முக்கிய லெவல் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்றைய விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் ரூ.2000 சரிவு

ஒரே வாரத்தில் ரூ.2000 சரிவு

தங்கம் விலையானது ஒரு வாரத்தில் 10 கிராமுக்கு 2,000 ரூபாயாக சரிவில் காணப்படுகின்றது. இதே கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,500 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. கடந்த வார செவ்வாய்க்கிழமையன்று 49,340 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், இன்று அதன் விலையானது 47,600 என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது ஒரு வாரத்தில் 1.8% சரிவினைக் கண்டுள்ளது.

16 மாத உச்சத்தில் டாலர் மதிப்பு

16 மாத உச்சத்தில் டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது 16 மாத உச்சத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1,800 டாலர்களுக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் தொடர்ந்து டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை விரைவில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 டாலர் சரிவு

100 டாலர் சரிவு

காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலையானது நவம்பர் மாத தொடக்கத்தில் 1880 டாலர்களுக்கு அருகில் இருந்த நிலையில், தற்போது அதனுடன் ஒப்பிடும்போது 100 டாலர்கள் சரிவில் காணப்படுகின்றது. இதே இந்திய சந்தையிலும் பலத்த சரிவில் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

சர்வதேச சந்தையில் பல காரணிகளுக்கும் மத்தியில் பணவீக்க விகிதமானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது, தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே சரிந்து வரும் நிலையில், இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

கடந்த சில தினங்களாகவே டாலர் மதிப்பானது அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் வட்டி விகிதமும் விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த 4 அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 11.60 டாலர் அதிகரித்து, 1,795.40 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று அதிகரித்து, அவுன்ஸூக்கு, 23.622 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 175 ரூபாய் அதிகரித்து, 47,609 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 341 ரூபாய் அதிகரித்து, 62,850 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 62,509 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 62,877 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து, 4,500 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து, 36,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 4,909 ரூபாயாகவும், சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 39,272 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,090 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பலத்த சரிவில் காணப்படுகின்றது. கிராமுக்கு 1.90 பைசா குறைந்து, 676 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 676 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,900 ரூபாய் குறைந்து, 67,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் கான்ட்ராக்ட்கள் டிசம்பர் 3, 2021 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 24th 2021: Gold prices continue to fall for 6th day, Will it fall further, What experts predict?

Gold prices on November 24th 2021: Gold prices continue to fall for 6th day, Will it fall further, What experts predict?/ பலத்த சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்றும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X