தொடர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில், இது இன்னும் சரியுமா? அடுத்த முக்கிய லெவல் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்றைய விலை நிலவரம் என்ன? பார்க்கலாம் வாருங்கள்.

தற்போது வரையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1800 கீழாக வர்த்தகமாகி வரும் நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1760 டாலர்களாகவும் உள்ளது. எனினும் இது இன்னும் சரியுமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த சில அமர்வுகளாகவே டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவான நிலையை எட்டி வந்த நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டது. ஆனால் தற்போது டாலரின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

சொத்து பிரிக்கும் முகேஷ் அம்பானி.. புதிய திட்டம்.. யாருக்கு என்ன கிடைக்கும்..!சொத்து பிரிக்கும் முகேஷ் அம்பானி.. புதிய திட்டம்.. யாருக்கு என்ன கிடைக்கும்..!

உச்சத்தில் இருந்து ரூ.8,600-க்கு மேல் சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.8,600-க்கு மேல் சரிவு

தங்கம் விலையானது ஒரு வாரத்தில் 10 கிராமுக்கு 2,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதே கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,600 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையானது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 14,000 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது.

வட்டி விகித மாற்றம் இருக்குமா?

வட்டி விகித மாற்றம் இருக்குமா?

தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே அமெரிக்க டாலரின் மதிப்பானது உச்சத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1,800 டாலர்களுக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் தற்போது டாலரின் மதிப்பானது சற்றே மீண்டும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக மத்திய வங்கி டேப்பரிங் திட்டத்தினை விரைவுபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இன்று தங்கம் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகின்றது.

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

அமெரிக்க டாலரின் மதிப்பில் உள்ள அழுத்தம், பத்திர சந்தை ஏற்றம் உள்ளிட்ட பலவும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. இதற்கிடையில் மத்திய வங்கிகள் பணவீக்கம் பற்றிய அச்சத்தினையும் எதிர்கொண்டுள்ளன. இதனால் மானிட்டரி பாலிசி கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது, நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஜிஎஸ்டி அதிகரிக்க போகிறதா?

தங்கத்திற்கு ஜிஎஸ்டி அதிகரிக்க போகிறதா?

தற்போதைய நிலையில் தங்கத்திற்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தினை 3%ல் இருந்து 5% ஆக அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் தங்க நகை விற்பனையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் இது தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கத்தின் விலையானது 47,700 ரூபாயினை மீண்டும் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த 5 அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. எனினும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 7.10 டாலர் அதிகரித்து, 1,791.35 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் 0.50% அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து அவுன்ஸூக்கு, 23.613 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 47,502 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 178 ரூபாய் அதிகரித்து, 62,813 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 62,635 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 62,911 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்றும் சற்று குறைந்து காணப்படுகின்றது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,496 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 35,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை


தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,905 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 39,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,050 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 67.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 678 ரூபாயாகவும், கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 67,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் கான்ட்ராக்ட்கள் டிசம்பர் 3, 2021 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தின் தேவை இருக்கும்பட்சத்தில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 25th 2021: Gold prices continue to fall for 7th day, Will it fall further, Is this the right time to buy?

Gold prices on November 25th 2021: Gold prices continue to fall for 7th day, Will it fall further, Is this the right time to buy?/ தொடர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X