தொடர் சரிவுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கம் விலை.. இன்று வாங்கலாமா?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டங்களில் தங்கம் வெறும் ஆபரணமாக மட்டும் அல்ல, முதலீடுகளிலும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக உள்ளது. இன்று போர்ட்போலியோ முதலீடுகளில், தங்கத்தின் பங்கு என்பது மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது.

ஆரம்ப காலகட்டத்தில் நமது முன்னோர்கள் தங்க ஆபரணமாகவும், காயினாகவும், தங்க கட்டிகளாகவும் வாங்கி வைத்தனர். ஆனால் இன்றோ அப்படியில்லை. தங்கத்தினை வாங்கி சேமிக்க பல திட்டங்கள் உண்டு. குறிப்பாக இணைய வழியில் வர்த்தகம் செய்யும் கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கமே, நல்ல லாபம் கொடுக்கும் முதலீடாக இருந்து வருகின்றது. மேலும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் தங்கம் உள்ளது. இப்படி முதலீட்டிலும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக தங்கம் மாறியுள்ளது.

ஆக அந்த வகையில் கமாடிட்டி சந்தைகளில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இன்று வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தொடர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன? தொடர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

ஒரே வாரத்தில் ரூ.1500 சரிவு

ஒரே வாரத்தில் ரூ.1500 சரிவு

தங்கம் விலையானது முந்தைய 5 வர்த்தக தினங்களில் 10 கிராமுக்கு 1,500 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. இதே கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,500 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகின்றது. குறிப்பாக புதியதாக ஆர்டர் எடுக்க நினைப்பவர்களுக்கு இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

16 மாத உச்சத்தில் டாலர்

16 மாத உச்சத்தில் டாலர்

அமெரிக்க டாலரின் மதிப்பானது முந்தைய அமர்வுகளில் 16 மாத உச்சத்தில் காணப்பட்டது. எனினும் அமெரிக்காவின் டேப்பரிங் நடவடிக்கையானது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது டாலரின் மதிப்பினை தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது 1800 டாலர்களுக்கு கீழாகத் தான் வர்த்தகமாகி வருகின்றது. கடந்த வாரத்தில் தங்கத்தில் புராபிட் புக்கிங் காரணமாக தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டது. ஆனால் இதுவே 2022ல் முக்கிய சப்போர்ட் விகிதமாக மாறக்கூடும். ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

தங்கம் விலையானது அடுத்து வரும் வாரங்களில் அவுன்ஸூக்கு 1850 டாலர்களை தொடலாம். இது தற்போதைய விலையில் இருந்து 3% அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த அமர்வில் அமெரிக்காவில் தாங்க்ஸ் கிவ்விங் டே என்பதால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் ஸ்பாட் மார்கெட் விலையானது அவுன்ஸூக்கு 1788.30 டாலர்களாக இருந்தது. மாற்றம் இல்லை.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

சர்வதேச சந்தையில் பல காரணிகளுக்கும் மத்தியில் பணவீக்க விகிதமானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2022ம் ஆண்டில் தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அமெரிக்காவின் வட்டி விகிதம் குறித்தான முடிவுகள் விரைவில் எடுக்கப்படலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக 5 அமர்வுகளாக சரிந்த நிலையில், நேற்று அமெரிக்காவின் தாங்க்ஸ் கிவ்விங் டே என்பதால் ஸ்பாட் மார்கெட்டில் பெரிய மாற்றம் இல்லை. எனினும் இன்று தற்போது அவுன்ஸூக்கு 13.65 டாலர்கள் அதிகரித்து, 1,798.10 டாலர்களாக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக புதியதாக வாங்கி வைக்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று அதிகரித்து, அவுன்ஸூக்கு, 23.578 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 278 ரூபாய் அதிகரித்து, 47,700 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 28 ரூபாய் குறைந்து, 63,125 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 63,150 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 63,101 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4,503 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 36,024 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4,912 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 39,296 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 68 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 680 ரூபாயாகவும், கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 68,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள், தங்கம் மற்றும் வெள்ளியின் கான்ட்ராக்ட்கள் டிசம்பர் 3, 2021 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம். ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 26th 2021: gold prices surge on global cues, investors can create fresh longs

Gold prices on November 26th 2021: gold prices surge on global cues, investors can create fresh longs/ தொடர் சரிவுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கம் விலை.. இன்று வாங்கலாமா?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X